Friday, February 4, 2011

சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ............



http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Chocolate.jpg
நாம் எல்லோரும் விரும்பி சாப்பிடுவோம் கண்டோஸ், சாக்லேட் . சிறியவர்கள் அதிகம் விரும்பி உண்பார்கள் . சாக்லேட் கூட சாப்பிடாதே என்று சின்ன பிள்ளைகளை அம்மாமார் பேசுவதை கேட்டிருக்கின்றோம் . பற்களில் சூத்தை வரும் என்று தான் அவர்கள் அப்படி கூறுவார்கள் . சாக்லேட் சாப்பிடும்போது பற்களால் சப்பி சாப்பிடாமல் உமிந்து சாப்பிடால் மிகவும் நல்லது . 
http://www.umassmed.edu/uploadedImages/healthyheart/chocolate.jpg
பல ஆய்வுகளில் இப்போது 
சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது 

என்று கூறி உள்ளனர். 

நோய் எதிர்ப்பு சக்திகளான பிளேவோனாய்ட்ஸ் 

என்ற பொருள் சாக்லேட்டில் கலக்கப்படும் கோகாவாவில் அதிக அளவில்

உள்ளது. அதுதான் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு சத்தை குறைக்க
 உதவுகிறது. அதனால் இதய நோய்கள் வர வாய்ப்பில்லாமல் போகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

http://www.diabetesmine.com/wp-content/uploads/2009/10/real-chocolate.jpg


70 சதவித இதய நோயை குறைக்கும் என்றும், புற்று நோய் வராமல் தடுக்கும் என்றும்
பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அதிக அளவில்
 சாக்லேட் சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம் நடைபெறு வதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன . 


பக்கவாதத்தால் மூளை பாதிக்கப்படும் வாய்ப்புகள் சாக்லேட் சாப்பிடுவதால் குறையும் .  
அதிக கிரீம் கொண்ட கருமையான சாக்லேட்களில் எபிகாடசின் என்ற பொருள் உள்ளது. அது நரம்பு செல்களுக்கு நன்மை தரக்கூடியது.  அதன் மூலம், பக்கவாதத்தை தவிர்ப்பதுடன் மூளை பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். எனவே, சாக்லேட் பிரியர்கள் அதிக எபிகாடசின் கொண்ட டார்க் சாக்லேட் சாப்பிடலாம். 


தோல் சுருக்கங்கள்தான் வயதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. புகை பிடித்தல், சுற்றுச்சூழல் மாசு,  தூக்கமின்மை ஆகியவைதான் வயதாவதை விரைவுபடுத்துகின்றன. இந்த பிரச்சனைகளை  சந்திப்பவர்கள் தினமும் 20 கிராம் சாக்லேட் சாப்பிட்டால், வயதான தோற்றத்தை தள்ளிப் போடலாம் என தெரிவிக்கின்றனர் .அதிக கோகோ கொண்ட டார்க் சாக்லேட், ரத்த அழுத்தத்தை குறைக்கும், பக்கவாத ஆபத்தைத் தடுக்கும் என பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



பாலில் செய்த சொக்லேட்கள் மிகவும் ருசியாக இருக்கும் . பாதாம்பருப்பு , கச்சான் சேர்த்து செய்த சொக்லேட்களும் நன்றாக இருக்கும் . பல வகைகளிலும் , பல வடிவங்களிலும் எல்லோரையும் கவரும் வகையிலும் சொக்லேட்கள் தயாரிக்கப்படுகின்றன . எல்லா நாட்டு சொக்லேட்களும் ஒவ்வொரு வகை ருசி கொண்டவையாக இருக்கும் . எல்லோரும் சாப்பிட்டு பாருங்க . அதுக்காக அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள் . அளவோடு சாப்பிடுங்க .

6 comments:

நச்சத்திரா said...

ஷொக்லேட்க்களை சிறுவர்கள் மட்டுமா? நானும் இன்னும் நிறைய சாப்பிடுவேன் இருதயநோய்வராதில்லை!
எனக்கான தளம் ஒன்றையும் இன்று தொடங்கியுள்ளேன். தங்கள் வரவு நல்வரவாக அங்கே வாருங்கள் தோழி!

பாலா said...

நல்ல இனிப்பான செய்திதான் சொல்லி இருக்கீங்க...

'பரிவை' சே.குமார் said...

இனிப்பான செய்தியா சொல்லியிருக்கீங்க.

Pavi said...

நன்றி நச்சத்திரா
வருகிறேன்

Pavi said...

நன்றி பாலா

Pavi said...

நன்றி குமார்