Tuesday, February 8, 2011

பொடுகுத் தொல்லையா ?


http://www.myspatreatment.com/img/Hair%20Care.jpg
இப்போதைய கால கட்டத்தில் கூந்தலை பராமரிப்பது சரியான கஷ்டமாக உள்ளது . அதிகமான தூசுகள் வெளியேறி எங்கேயும் வெளியில் சென்று வந்தால் தலை பிசுபிசு என்று ஒட்டுகிறது . முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம்.
http://www.designerhairstyle.net/wp-content/uploads/2010/10/Hair-Care.jpg
பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும். வெள்ளை படை போல இருக்கும் . பெண்களுக்கு தான் இந்த தொல்லை என்றால் சில ஆண்களுக்கும் இந்த பொடுகு தொல்லை இருக்கிறது .
http://www.howtodothings.com/files/u10023/how-to-scrunch-hair.jpg
பொடுகு தலையில் இருந்தால் தலை மயிரும் கொட்ட தொடங்குகிறது . பொடுகை இல்லாமல் செய்தால்  தான் தலைமயிர் கொட்டுவது நிற்கும் . எனவே பொடுகு வராமல் தடுக்க சில வழிகள் உண்டு . வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், தலையணை உறை சுத்தமானதாக இருக்க வேண்டும் , பாவிக்கும் சீப்பை மூன்று நாட்களுக்கு ஒருதடவை சுத்தம் செய்ய வேண்டும் ,  அதிகமாக தண்ணீர் குடிக்கவும் , எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை குறைக்கவும் , துவாயை வாரம் ஒருதடவை அலசவும் ,  வாரம் இரு  தடவை தலைக்கு சீயாக்காய் , சம்போ போட்டு முழுக வேண்டும் ,  தவறான உணவு பழக்கம் ,  அதிக மன அழுத்தம் . 
நாம் சுத்தமாக இருக்க வேண்டும் . சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் , ஒவ்வொரு நாளும் குளிக்க வேண்டும் , தலையை சுத்தமாக கழுவி துப்பரவாக வைத்திருக்க வேண்டும் . இப்படி இருந்தால் பொடுகு வருவதை கட்டுப்படுத்தலாம் .