Wednesday, March 2, 2011

இலங்கை அணியின் புயல் லசித் மலிங்க

http://www.tamilweek.com/images/Lasith_Malinga_then_traps_Ed_Joyce_lbw_to_have_both_England_openers_back_in_the_pavilion_for_just_11_runs.jpg

இலங்கை அணியின் புயல் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இலங்கை அணியின் பல வெற்றிகளுக்கு வித்திட்டு வருகிறார் . அவரது புயல் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் துடுப்பாட்ட வீரர்கள் விக்கட்டுகளை பறி கொடுக்கின்றனர் . உலகக் கிண்ணப் போட்டிகள் இப்போது நடை பெற்று வருகின்றன . நேற்று நடந்த போட்டியில் மலிங்க ஹட்றிக் விக்கட்டுகளை கைப்பற்றினார் .
Lasith Malinga
உலக கிண்ண போட்டிகளில் இரண்டு முறை ஹட்றிக் விக்கட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மலிங்க . 
உலகக் கோப்பை கிரிக்கெட்  ஏ பிரிவு ஆட்டத்தில் இலங்கை மற்றும் கென்யா அணிகள் மோதிய போட்டியில் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார். 
42 வது ஓவரின் இறுதிப் பந்தில் மிஸ்ரா விக்கெட்டை வீழ்த்திய லசித் மலிங்க 44 வது ஓவரின் முதல் பந்தில் ஒன்கோண்டாவையும் அடுத்த பந்தில் நகோச்யையும் வீழ்த்தி 
ஹட்றிக்
 சாதனை புரிந்தார். இது உலகக் கோப்பை போட்டிகளில் லசித் மலிங்க படைக்கும் இரண்டாவது 
ஹட்றிக்
 சாதனையாகும். 2007 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் லசித் மலிங்க . 

நேற்றய போட்டியில் மலிங்க 6 விக்கட்டுகளை கைப்பற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது . 
2007 உலகக் கோப்பையில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சனின் பந்து வீசுவது போல் இவர் வீசுவது பல துடுப்பாட்ட வீரர்களை அதிர வைத்துள்ளது. இவரது வேகத்துக்கும் , ஜோக்கர் பந்துகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் துடுப்பாட்ட வீரர்கள் . இவரது பந்துகளுக்கு விக்கட்டுகள் பறக்கும் அல்லது 
எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழப்பார்கள் . 


7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் என்ற நிலையில் கென்யா தடுமாறிக்கொண்டிருந்தபோது மலிங்கா பந்துவீச வந்தார். 2-வது ஓவரின் கடைசி பந்தில் அவர் தன்மய் மிஸ்ராவை வெளியேற்றினார். 44-வது ஓவரின் முதல் பந்தில் கோச்சேவையும், 2-வது பந்தில் ஒடினோவையும் கிளீன் போல்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார் மலிங்க.

முதுகு வலி காரணமாக முதல் 2 ஆட்டங்களில் மலிங்க பங்கேற்கவில்லை. முதுகு வலியிலிருந்து மீண்டு வந்த மலிங்க , அபாரமாகப் பந்துவீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவரது புயல்வேக ஜோக்கர்களுக்கு கென்ய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன . இலங்கை அணிக்கு இன்னும் பல வெற்றிகளை மலிங்க தேடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு ஆகும் .









 

2 comments:

சக்தி கல்வி மையம் said...

நல்ல அலசல்...

Pavi said...

நன்றி கருன்