Tuesday, March 15, 2011

தல தல தான்

http://1.bp.blogspot.com/_UcSGFfPir6U/THIdFUTnG4I/AAAAAAAAAUk/_onUDT0kIjg/s1600/Mankatha-Movie-Stills-2%5B1%5D.jpg

அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் மங்காத்தா . இந்த திரைப்படத்தை அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியிடுவதட்க்கு தீர்மானித்து உள்ளனர். தலயின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் தலயின் மங்காத்தாவுக்காக . படம் தொடங்கிய நாளில் இருந்து பல கதைகள், சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன .
http://i.indiaglitz.com/tamil/news/mankatha181210_2.jpg
அஜீத் தன் கையால பிரியாணி சமைச்சுப் போட்டார் என த்ரிஷா ஒரு பக்கம் பேட்டி கொடுக்கிறார்... தல பிரியாணி என வெங்கட் பிரபு தன் பங்குக்கு பேஸ்புக்கில் அலறுகிறார்... அஜீத் எனக்கு மட்டும் தனியாக பிரியாணி செஞ்சுப் போட்டார் என கைனாட் என்ற வடக்கத்திய குத்தாட்ட அம்மணியும் போகுமிடமெல்லாம் கூறுகிறார்...இப்படி எல்லோரும் தல புராணம் பாடி வரும் வேளையில் அந்த லிஸ்டில் இன்னுமொருவரும் இணைகிறார் . 
இந்த நிலையில் நடிகை அஞ்சலியும் தன் பங்குக்கு அஜீத் புகழ் பாடியுள்ளார். ஆனால் நல்லவேளை, இது பிரியாணி சமாச்சாரமில்லை. மங்காத்தா படத்தில் இப்போது அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

மங்காத்தா படத்தில் அஜித் வயதான வேடம் ஒன்றும் ஏற்று நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது . வரலாறு படத்தில் அவர் வயதான வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் அஜித் . அஜித் ரசிகர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்தும் இருந்தது . இப்போது அதே போல் மங்காத்தா படத்திலும் அப்படி ஒரு வயதான தோற்றத்தில் தல வருகிறாராம் . 
படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் எடிட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடித்த ஏகன், அசல் என இரண்டு படங்களுமே அவருக்கு படு தோல்வியை கொடுத்ததோடு அவர் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் மங்காத்தா இருக்கும் என வெங்கட் பிரபு சொல்லிவருகிறார். அதை அவர் செயலிலும் காட்ட வேண்டும் . 

http://2.bp.blogspot.com/_eewr1b1LpYA/TLFC8WBe9xI/AAAAAAAAIcE/ltRBHpIu8hU/s1600/ajith_mankatha_official_posters_wallpapers_01.jpg
அதனால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதுவும் அஜீத் பிறந்தநாளன்று படம் வெளிவர இருப்பதால் அஜீத் ரசிகர்கள் இந்த வருட தீபாவளியை மங்காத்தா ரிலீஸில் இருக்கும் என்றே சொல்லாலாம்.
படத்தில் இன்னொரு முக்கிய நட்சத்திரமும் இருக்கிறார், அவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் லக்‌ஷ்மி ராய், அஞ்சலி, வைபவ் என பல முன்னனி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
படத்தின் எடிட்டிங் முடித்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. எடிட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையிலும் படத்தைப் பார்த்த தயாநிதி அழகிரி பிரம்மித்துப் போனாராம்.
படம் பிராமாதமாக இருப்பதைப் பார்த்து உற்சாகத்தில் `தல தல தான்` என்றும் சொல்லி இருக்கிறார். படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்கிறது மங்காத்தா டீம். யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசை வேலைகளை  படு வேகமாக செய்துவருகிறார்.

படமும் , பாடல்களும் அருமையாக இருக்க வேண்டும் . படம் வெற்றி அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் . பொறுத்திருந்து பார்ப்போம் அஜித் ரசிகர்களுக்கு அல்வா கொடுக்கிறாரா , இனிப்பு கொடுக்கிறாரா என்று ................







8 comments:

"ராஜா" said...

மங்காத்தாவை நானும் அதிகம் எதிர்பார்கிறேன் ... இந்த முறை கண்டிப்பாக தல ஜொலிப்பார் என்று நம்புகிறேன்

"ராஜா" said...

//தல தல தான்

பல விசயங்களில் தல எப்போதும் தலைதான் ... சினிமாவில் இப்பொழுது கொஞ்சம் தடுமாறுகிறார் ... ரெண்டு வெற்றி கிடைத்தால் போதும் அதிலும் தல தலதான் என்று ஆகிவிடும் ...

"ராஜா" said...

bw நீங்க அஜித் ரசிகையா?

சே.குமார் said...

இந்த முறை கண்டிப்பாக தல ஜொலிப்பார்.

India Free Traffic said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

Pavi said...

பொறுத்திருந்து பார்ப்போம்
நன்றி ராஜா

Pavi said...

நல்ல படம் என்றால் யாருடைய படங்களையும் பார்ப்பேன் ராஜா

Pavi said...

என்னவென்று பார்ப்போம்
மொத்தம் ஒன்பது பாடல்கள் மங்காத்தாவில் என்கிறார்கள்
நன்றி குமார்