Tuesday, March 15, 2011

ஜப்பானில் ஏற்பட்டு இருக்கும் அழிவு

http://latimesphoto.files.wordpress.com/2011/03/la-fg-13earthquake07.jpg

எல்லா நாடுகளும் பொருளாதாரம் , தொழில் நுட்பம் என்பவற்றில் போட்டி போட்டு கொண்டு முன்னேறி வளர்ச்சி அடைந்து வருகின்றன . இப்படி வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இயற்கையும் தனது அழிவுகளை காட்டுகிறது . இயற்கை சீற்றம் கொண்டு எழும்பி சில நொடிகளில் எல்லாவற்றையும் மனித சக்தியை விட இயற்கை அவற்றை அளித்து விடுகிறது . 
http://image.internetautoguide.com/f/industry-news/honda-gets-hit-the-hardest-by-the-japan-earthquake-2011-/30772466+w527+st0/2011-japan-earthquake.jpg
அண்மையில் ஜப்பானை உலுக்கிய சம்பவம் எல்லா நாடுகளையும் மிகவும் பீதி அடைய வைத்துள்ளது . எப்போது நிலநடுக்கம் வரும் , பூமியதிர்ச்சி வரும் என்று இலகுவில் ஜீரணிக்க முடியாமல் உள்ளது . ஐப்பானின் கிழக்குக் கரையோரப் பிரதேசமான ஹொன்ஷ¤ பிரதேசத்தில் 8.9 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டு அதன் பின்பு சுனாமி அனர்த்தத்தால் பெரும் பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதுடன், பெரும் எண்ணிக்கையான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணமல் போய் உள்ளதோடு பல்லாயிரக்கணக்கானோர் இறந்து உள்ளனர் . 
http://www.foursquare.org/images/news/news_Japan_earthquake_2011.jpg
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து ரஷ்யா, இந்தோனேசியா, குவான்டமாலா, எல். சல்வடோர், கொஸ்டா ரிக்கா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள், ஹவாய் தீவுகள் உட்பட 20 நாடுகளில் சுனாமி அனர்த்தம் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டமை நாம் அனைவரும் அறிந்ததே .இது போதாதென்று ஜப்பானின் பியூகுசிமாவில் உள்ள அணு உலையில் 2ஆவது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதன் ஒரு பகுதி உருகி கசிய ஆரம்பித்திருக்கும் நிலையில் மற்றொரு செர்னொபையில் அனர்த்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் அந்த அணு உலை இருக்கும் இடத்திலிருந்து 12 மைல் தூரத்திற்குள் உள்ள வீடுகள் கட்டிடங்களிலிருந்து சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
http://4.bp.blogspot.com/-r7glKybZzpI/TXsqtZJtwtI/AAAAAAAACuA/TYwylQ53IGc/s1600/japan%2Beathquake%2B2011%2Bimages.jpg
 கதிர் வீச்சால் தாக்கத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 160 ஐ எட்டியுள்ளது. இந்த அணு உலையின் மூன்றாவது ரியக்டரின் குளிரூட்டும் முறைமையும் செயலிழந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கதிர் வீச்சு பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக அயடின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


33 அடி உயரத்திற்கு மேலெழுந்த ஆழிப்பேரலையால் கரையோரப் பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதாவது 2100 கிலோ மீற்றர் தூரத்திற்கு பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது கதிர்வீச்சு கசிவு தொடர்பான அச்சமும் மேலெழுந்திருக்கிறது.இந்த பூமியதிர்ச்சி 8.9 மக்னிடியூட் அலகென முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 9 மக்னிடியூட் அலகென ஜப்பான் தெரிவித்திருக்கிறது. 1923 இல் கண்டோவில் இடம்பெற்ற 8.3 மக்னிடியூட் அலகு பூகம்பத்தில் 1 இலட்சத்து 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 1995 இல் ஹோபேயில் 7.2 மக்னிடியூட் அலகில் ஏற்பட்ட பூமியதிர்வில் 6,400 பேர் பலியாகியிருந்தனர்.
http://www.chinasmack.com/wp-content/uploads/2011/03/2011-march-11-japan-earthquake-sendai-destroyed-bus-stop.jpg
புவியியலாளர்களின் கருத்தின்படி பூமியின் பல கண்டங்களினதும் மற்றும் சமுத்திரங்களினதும் தட்டுக்கள் உதாரணமாக பசுபிக் தட்டு, பிலிப்பைன் தட்டு, யூரோ ஏசிய தட்டு, வட அமெரிக்க தட்டு ஆகியன ஜப்பானிய பகுதியிலேயே சந்திக்கின்றன. உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.  ஜப்பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின் அதிகமான நிலநடுக்கங்கள் எரிமலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதியிலேயே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும்

1933 இல் இதே பிரதேசத்தில் ஏற்பட்ட 8.1 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். உலகளாவிய ரீதியில் அதிர்வு பிரதேசங்களில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் அடிக்கடி பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதுண்டு.1896 இல் சென்ரிகு நகரில் ஏற்பட்ட 8.5 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சியில் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 6 ரிச்டர் அளவுக்கு மேல் இடம்பெறும் உலகளாவிய பூமியதிர்வுகளில் 20 சதவீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.
http://media.kansascity.com/smedia/2011/03/13/22/Japan_Earthquake_TOK801.standalone.prod_affiliate.81.jpg
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இந்த பாதிப்பினால் பொருளாதார , வர்த்தக சந்தையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன . எனினும் ஜப்பான் பல தடைகளையும் , துன்பங்களையும் தாண்டி முன்னேறிக்கொண்டு வருகின்ற நாடு . முன்னேறி வந்த நாடு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே . பல உற்பத்தி நிறுவனங்கள் தற்காலிகமாக தமது தயாரிப்புகளை நிறுத்தி வைத்துள்ளன . பல முன்னணி நிறுவனங்கள் பல ஜப்பானில் தான் உள்ளன .

எத்தனை குழந்தைகள் தாயை இழந்தும், தந்தையை இழந்தும் , தமது உறவுகளை இழந்தும் , சொத்துகளை இழந்தும் உள்ளனர் .எவ்வளவு பேர் அனாதைகள் ஆக்கப்பட்டு உள்ளனர் . உயிருக்கு போராடிக்கொண்டு உள்ளனர் . இடிப்பாடுகளுக்கு இடையில் எத்தனை பேர் சிக்கி தவிக்கிறார்கள் . இயற்கையின் சீற்றத்தால் மனித உயிர்கள் இப்படி காவு கொள்ளப்படுகிறது . 
http://www.prasetyojanjang.com/wp-content/uploads/2011/03/As-many-as-2000-Japanese-earthquake-victims-bodies-were-found.jpg
ஜப்பானில் உயிர் இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என எல்லோரும் பிரார்த்திப்போமாக . 






.




4 comments:

சக்தி கல்வி மையம் said...

என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Pavi said...

நன்றி கருன் உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும்

Pavi said...

நன்றி குமார் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்