உலகக் கிண்ணம் யாருக்கு ? என்பது தான் இப்போதைய கேள்வி எல்லோர் இடத்திலும் . இலங்கை , இந்தியா, பாகிஸ்தான் , தென்னாபிரிக்கா , அவுஸ்டேலியா ,இங்கிலாந்து , நியூசிலாந்து இவற்றுள் யாருக்கு உலகக் கிண்ணம் என்று கடுமையான போட்டி நடக்க இருக்கிறது . ரசிகர்களும் ஆவலாக உள்ளனர் . எல்லா போட்டிகளிலும் பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம் . ஏனெனில் , எல்லா அணியும் சிறப்பாக உள்ளன .
எல்லா அணிகளுக்கும் வாழ்வா, சாவா என்று தான் போட்டி . நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி பத்து விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றது .மேற்கிந்திய அணி ஒரு பலமற்ற அணி போல் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்காமல் படு தோல்வியை தழுவியது . இன்றைய போட்டியில் நடப்பு சம்பியனும், இந்தியாவும் களமிறங்குகின்றன .
இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகளாக கருதப்படுவதால் போட்டியில் போராட்டத்துக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. சச்சின் இந்த உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு சதங்களை விளாசி சிறப்பாக ஆடி வருகிறார். யுவராஜ், கம்பீர், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். யுவராஜ் இதுவரை 6 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு சதத்துடன் 284 ஓட்டங்களை குவித்ததோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சகலதுறை வீரராக இருக்கிறார் .
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் ஜாகீர்கானை நம்பியே இந்திய அணி இருக்கிறது . துடுப்பாட்டத்தில் பலமாக இருக்கின்ற இந்திய அணி பந்துவீச்சில் பலமின்றி காணப்படுகிறது . அவுஸ்டேலிய அணியை பொறுத்தவரையில் சகலதுறைகளிலும் பிரகாசித்து காணப்படுகின்றது . எனினும் ஹைடன் , கில்கிறிஸ்ட் , மெக்ரா , வோர்ன் போன்றோரின் இடம் வெற்றிடமாகவே உள்ளது . பந்துவீச்சில் பலமாக இருக்கிறது .
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பிரட் லீ, ஷான் டெய்ட், ஜான்சன் என வலுவான வேகப்பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது ஆஸிய அணியின் பலம் .இருந்தபோதிலும் , எனது நம்பிக்கை இன்று இந்தியா வெல்லும் . அடுத்த சுற்றுக்கு முன்னேறும் . இது என் நம்பிக்கை. பொறுத்திருந்து பார்ப்போம் .
No comments:
Post a Comment