Monday, March 28, 2011

என்ன நடந்தது ...............அன்றொரு நாள் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் சரியான சத்தமாக சண்டை நடந்து கொண்டு இருந்தது . என்ன நடந்தது . இவர்கள் ஏன் இப்படி சண்டை பிடிக்கிறார்கள் என என் மனதுக்குள் நினைத்துக் கொண்டு என்ன அங்கு நடக்கின்றது என்று பார்க்க ஆவலாக இருந்தது . எங்கேயும் சண்டை ஒன்று நடந்தால் நாமெல்லாம் பார்க்க கிளம்புவது சகஜம் தானேப்பா ..............
http://www.istockphoto.com/file_thumbview_approve/5451490/2/istockphoto_5451490-husband-and-wife-shopping.jpg
எனது வீட்டு வேலைகளை போட்டது போட்டபடி விட்டுவிட்டு பக்கத்து வீட்டு வேலியால் எட்டி பார்த்தேன் . ஆறு , ஏழு பேர் கூடி நின்றார்கள் . சரி நாமலும் போவம் என வேலியால் பூந்து பக்கத்து வீட்டுக்கு சென்றேன் . சண்டை அகோரமாக நடந்தது . என்ன பிரச்சனை நடந்தது . எதுக்காக கத்துகிறார்கள்  என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை . என்ன நடந்தது என்று பார்ப்பம் ............

பக்கத்தில் நின்ற அன்டியிடம் கேட்டேன் என்ன நடந்தது என்று 'ம்ம்ம்ம்ம்ம் அதுவா பிள்ள இந்த வீட்டு மனுசனும் , மனுசியும் கல்யாணம் கட்டின நாளில் இருந்து ஒரே சண்டை தான் . அது வீட்டுக்குள்ளே நடந்தது . இப்போ வீட்டுக்கு வெளியே நடக்குது . இரண்டு பேரும் மாறி மாறி சண்டை பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் . கையில் வேற அவா அகப்பையுடனும் , அவர் கத்தியோடும் நிற்கிறார் . நாம் எப்படி இந்த பிரச்சனைக்குள் தலை இடுவது என்று கூறினார் ' அன்டி. 
http://fotosa.ru/stock_photo/Imageshop/p_2424355.jpg
இதென்னடா இந்த பொம்பிளை இப்படி கத்தி ஊர கூட்டுது .............என்று நான் வாய்க்குள் முணுமுணுத்து கொண்டேன் . அடேய் நாயே என்னடா ரொம்ப துள்ளுற , என்ன வேட்டிடுவாயா என்று காத்த , அவனும் என்னடி உண்ட வாயை கொஞ்சம் மூடு ........நீயெல்லாம் பொம்பிளையாடி, அகப்பை காம்ப கீழ போடடி என்று அவனும் கத்துகிறான் .

பழைய பிரச்சனைகள் எல்லாம் இருவரும் மனதில் வைத்துக் கொண்டதை எல்லாம் இப்போது எல்லோர் முன்னிலையிலும் கொட்டி தீர்க்கிறார்கள் . ஏழு . எட்டு பேராக இருந்த கூட்டம் வர வர ஒவ்வொன்றாக கூடுகிறது . புதினம் பார்க்கத்தான் . நம்மட சனங்கள் புதினம் பார்க்க என்றால் எல்லா வேலைகளையும் மறந்து விட்டு உடனே ஓடி விடுவார்கள் .

அங்கிள் என்ன இவர்கள் இப்படி கத்தி கொண்டு நிற்கிறார்கள் . நிறுத்த மாட்டார்களா என்று கேட்டேன் நான் ஒருவரிடம் . அவர் சொன்னார் ஐயோ பிள்ள இதுகள் இரண்டு பேரிலும் ஒருவர் அடங்கி விட்டு கொடுத்து போகலாம் தானே , சரி அந்த பொம்பிளை அவனுக்கு கோபம் வருகிற மாதிரி கத்திக்கொண்டே இருக்கிறாள் . இவளை போல பொம்பிளையை நான் பார்த்ததே இல்லை என் வாழ்நாளில் என்று சொல்லி இவள் ஒரு சரியான வாய்க்காறியாக இருப்பாள் போல இருக்குது என்றார் . அப்போ நான் நினச்சேன் அவன் பாவம் . அவன் ஒரு அப்பாவியாக இருக்கிறான் . இவள் அவனை வறுத்து எடுக்கிறாளே என்று .

பிறகுதான் எனக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்தது . இவளிடம் உள்ள நகைகளை வைத்து கடை ஒன்று ஆரம்பித்து நடத்திக் கொண்டு இருந்தவனாம் . கடையில் வேலை செய்த பொடியன் கொஞ்சம் கொஞ்சமாக இருந்த பொருட்களை விற்று மிகுதி பொருட்களை களவாடிக் கொண்டு போய்விட்டானாம் . இத்தனைக்கும் இவன் அவன் மேல் அபார நம்பிக்கை வைத்து இருந்தானாம் . இவர் வேறு ஒரு கம்பனியில் வோட்ச்ச்மன் வேலை செய்கிறார் . கடைக்கு போவது குறைவு . இடைக்கிடை கொஞ்ச பணம் அந்த பொடியன் கொடுத்து வந்தானாம் பிறகு அதுகும் இல்லை . இவர் பெயரில் கடன்களை கடைக்கு என்று வாங்கி விட்டு அவன் தப்பித்து எங்கோ போய்விட்டான் என்று கூறினார்கள் .

இவன் முன்னேறட்டும் என்று அவள் நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டு ஒரு நகையும் இல்லாமல் இருக்கிறாள் . இவன் ஒரு மடையன் . எல்லோரையும் எளிதில் நம்பி விடுகிறான் . என்றெல்லாம் அவள் பேசுகிறாள் . இப்போதுதான் அவள் ஏன் அப்படி பேசினாள் என்று எனக்கு புரிந்தது . அவள் பேசுகிறதும் சரி தானே . நாம் அதுதான் எந்த பிரச்சனையும் தெரியாமல் கதைக்க கூடாது . எதையும் தெரிந்து கதைக்க வேண்டும் . தெரியாமல் எதையும் கதைக்க கூடாது என்று . அது உண்மைதான் . 2 comments:

Lakshmi said...

இதெல்லாம் வேடிக்கை பாக்கர விஷயங்களா/அவங்க எவ்வளவு நொந்து போயிருப்பாங்க. ஆனா வீதில வந்து சண்டை போட்டது தப்பாச்சு.

Pavi said...

ஆமாம். நன்றி லக்ஸ்மி அம்மா