என்ன செய்ய ???
நேர்மையாக இருக்க வேண்டும்
என்று ஆசைப்பட்டேன்
அது என்னால் முடியவில்லை
பொய் பேசக்கூடாது என்று
நினைத்திருந்தேன் அதுவும்
என்னால் முடியவில்லை
தனிமையை விரும்பினேன்
அதுவும் நடக்கவில்லை
நாட்டில் ஊழல் இருக்க
கூடாது என்று விரும்பினேன்
ம்ம்ம்ம் அதுவும் நடக்கவில்லை
எல்லோரையும் நம்பினேன்
அவர்கள் எல்லோரும் என்னை
ஏமாற்றுகிறார்கள் என்று
பின்புதான் புரிந்து கொண்டேன்
ஏன் இந்த மாய உலகம்
என்று இந்த வாழ்க்கையையே
வெறுத்தேன் , இந்த உலகை
வெறுத்தேன் .....................
என்ன செய்ய ???
அரசியல் என்றால்
அரசியலே வேண்டாம் என்று
ஒதுங்குகிரார்களே அது ஏன் ?
அது சாக்கடை என்றா
நாமெல்லாம் அந்த சாக்கடையை
சுத்தம் செய்ய வேண்டும்
அப்போதுதான் நாடு வளம்பெறும்
மக்கள் சந்தோசமாக
நாட்டில் வசிக்க முடியும்
அரசியலில் ஒருவருக்கொருவர்
சண்டை பிடிக்கிறார்கள்
என்ன என்று கேட்டால்
அரசியலில் இதெல்லாம்
சகயமப்பா என்கிறார்களே
முதலில் அவர்களிடம் ஒற்றுமை
நிலவினால் தானே நாட்டில்
உள்ள பிரச்சனைகளை
எல்லாம் தீர்க்க முடியும்
என்ன சொல்கிறீர்கள் ???
8 comments:
முதலில் அவர்களிடம் ஒற்றுமை
நிலவினால் தானே நாட்டில்
உள்ள பிரச்சனைகளை
எல்லாம் தீர்க்க முடியும்
என்ன சொல்கிறீர்கள் ???
நாட்டில் உள்ள பிரச்னையை வைத்து தான் அவங்க காலத்த ஓட்டுறாங்க
ஒற்றுமை நிலவினால் தானே நாட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க முடியும்
சரி தான்
///அவர்களிடம் ஒற்றுமை நிலவினால் தானே நாட்டில் உள்ள பிரச்சனைகளை
எல்லாம் தீர்க்க முடியும் என்ன சொல்கிறீர்கள் ???///
உண்மை தான்... என்ன செய்யலாம்?
எனது வலைப்பூவில்: மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ
அரசியல் சாக்கடைதான். இறங்கி சுத்தம் செய்யும் வரை. சரியா சொன்னீங்க...
நன்றி மகான்
நன்றி சரவணன்
நன்றி பிரகாஷ்
நன்றி பாலா
Post a Comment