Sunday, April 24, 2011

சத்ய சாய்பாபா மரணம்


பல பக்தர்களை தன்னகத்தே கொண்ட சத்ய சாய்பாபா இன்று இந்த உலகத்தை விட்டு நீத்தார் . 
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட சாய்பாபா தனது 85 ஆவது வயதில் இந்த உலகை விட்டு நீத்தார் . 
http://www.nndb.com/people/281/000050131/sai-baba-1-sized.jpg
இதயக் கோளாறு, மூச்சுத் திணறல் இருந்து வந்துள்ளது. கல்லீரல் இயக்கம் இழந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் குழுவினர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து வந்தனர். அவரது உடல் நிலை குறித்து பரிசோதித்து வந்தனர் . 
இந்நிலையில் இன்று காலை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் செய்தி தெரிவித்தன. இந்தச் செய்தி கேட்டு பாபாவின் பக்தர்கள் பெரும் துயரம் அடைந்தனர். லட்சக் கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் ஆசிரமத்துக்கு விரைந்துள்ளனர்.
http://www.einterface.net/gamini/BABA.JPG
"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம். இதனை தான் தனது பக்தர்களுக்கு அவர் போதித்தார் . சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர். 
http://www.ndtvexpress.com/wp-content/uploads/2011/04/Sathya-Sai-Baba-4.jpg
பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யபடுத்தினார். இவரது ஆன்மிக குரு ஷீரடி சாய்பாபா . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.
அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும், படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும், சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும், தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும், மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய், உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் இவை எல்லாம் பகவான் சாய்பாபாவின் பொன்மொழிகள் .
பக்தர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் . 



















 

4 comments:

r.v.saravanan said...

அவர் இவ்வுலகில் வலம் வந்த நாட்களில் நாமும் இருந்தோம் என்பதே பெருமைக்கும் மகிழ்வுக்கும் உரியது

Nalliah said...

கடவுளின் அவதாரம் என்று தன்னை மக்களை ஏமாற்றிய சாய்பாபா தன்னை தானே காத்துக்கொள்ள முடியாத , மூச்சு விடுவதற்கே நவீன மருத்துவ சாதனங்களை நம்பியிருக்க வேண்டிய, முடிவில் மரணமாகி போகின்ற சாதாரண மனிதன் தான் என்பதனை சாய்பாபாவின் மரணம் தெளிவாக்கியிருக்கிறது. கடவுளின் அவதாரம் என்று லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய சாய்பாபாவுக்கு தனது மரணத்தில் இருந்து தப்ப முடியவில்லை. மரணத்தை ஏமாற்றவும் முடியவில்லை

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி நல்லையா