அவளுக்கும் கல்யாண
வயது வந்துவிட்டது
அவளுக்கு அழகிருந்தும்
அவளின் பெற்றோரிடம்
எல்லோரும் கேட்கும்
பணமுமில்லை , வீடு ,
நிலமுமில்லை இருந்தும்
அவளுக்கு நல்ல குணம்
உண்டு - இந்த உலகில்
நவ நாகரிக உலகில்
இப்போது இவை இருந்தும்
பயனில்லை - பணத்துக்கு
தான் மதிப்பு இக்காலத்தில்
அழகு இல்லாவிட்டலும்
பணம் இருந்தால் சரி
எல்லோரிடமும் எல்லாம்
இருப்பதில்லை - பணம்
இல்லாத பெற்றோர்கள்
தமது பிள்ளைகளை எப்படி
திருமணம் செய்து கொடுப்பது
சொத்து வேண்டாம்
பணம் வேண்டாம்
நல்ல குணமுள்ள பெண்
வேண்டும் என்று ஒருவன்
வராமலா போக போகிறான்
அவள் முப்பது வருடங்களாக
ஒருவன் தனக்கென பிறந்து
இருப்பான் என காத்து
இருக்கிறாள் - ம்ம்ம்ம்ம்ம்
அவளுக்கு என்று ஒரு
நல்ல ஆண்மகன்
கிடைக்காமலா போக
போகிறான் .............
ஏக்கத்தில் அவள் நாட்கள்
ஒவ்வொன்றையும் கழித்து
கொண்டு இருக்கிறாள் ...........
6 comments:
கவிதைக்கு ஒரு சபாஷ்..
ஏக்கக் கவிதை! நல்ல வாழ்க்கை அமையட்டும் குணத்திற்கு ஏற்ப.
பெண்ணை பெற்றவர்கள் எல்லோரும் நல்ல மாப்பிள்ளை என்றாலே பணக்கார மாப்பிள்ளை என்று நினைக்கிறார்கள். அதுதான் பிரச்சனை. கவிதை நன்றாக இருக்கிறது.
நன்றி சௌந்தர்
நன்றி ராஜேஸ்வரி அவர்களே
நன்றி பாலா
Post a Comment