Monday, May 2, 2011

இன்றைக்கு உலகம் பூராகவும் முக்கிய செய்தி எதுவாக இருக்கும் ?

http://i.telegraph.co.uk/multimedia/archive/01416/osamaBinLaden_1416164c.jpg

இன்றைய தொலைக்காட்சி செய்திகள் , வானொலிகள் , மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றில் முக்கிய செய்தியாக வலம் வரும் செய்தி ஒசாமா இறந்தான் என்பது தான் . அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமாபின்லாடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  
http://cdn3.digitaltrends.com/wp-content/uploads/2011/05/Osama-Bin-Laden-dead-killed-650x487.jpg
சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
http://www.indiatalkies.com/images/osama-bin-laden32805N.jpg
சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லாடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான். கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா
http://www.thepeoplesvoice.org/TPV3/media/blogs/blog/9/osama_bin_laden_dead0001_66.jpg
இன்றைய முக்கிய செய்தி ஒசாமா கொல்லப்பட்டான் , ஒபாமா அறிவிப்பு 
ஒசாமா அழிந்தான் 
ஒசாமா ஒழிந்தான் 
இவை தான் இன்றைய ஹாட் தலைப்புக்கள் . 











.

4 comments:

பாலா said...

இனி அமெரிக்கபடைகள் ஆஃப்கானை விட்டு வெளியேறி விடுமா?

இராஜராஜேஸ்வரி said...

ஒபாமாவும் ஒசாமாவும்.....!!
"இன்றைக்கு உலகம் பூராகவும் முக்கிய செய்தி !!

Pavi said...

நமக்கு தெரியுமா ?
அது ஒபாமாவுக்கு தான் வெளிச்சம்
நன்றி பாலா

Pavi said...

நன்றி ஈஸ்வரி அம்மா உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்