அவள் எங்கே போகிறாள்
எங்கே வருகிறாள் என்றும்
யார் யாருடன் கதைக்கிறாள்
பேசுகிறாள் என்று
அவளை எந்த நேரமும்
கண்காணிக்கும் கணவன்
அவள் ஒரு இல்லத்தரசி
வேலைக்கு போகிறாள்
சம்பாதிக்கின்றாள் கணவனும்
அப்படித்தான் - அப்படி
இருக்கையில் அவள் மீது
கணவன் ஏன் சந்தேகப்படுகின்றான்
அவள் நேர்மை , நீதி , கண்ணியம் பற்றி
பிறர் இடத்தில் விவாதிப்பவள்
அவளை கணவன் சந்தேகக் கண்
கொண்டு பார்த்தால் அவளின்
மனம் எப்படி இருக்கும்
யாருக்கும் சொல்லாமல் அவள்
தனது மனதுக்குள் வைத்து
பூட்டி தினம் தினம் அழுகின்றாள்
அந்த அவலைப் பெண்..........
7 comments:
இது எல்லா குடும்பத்திலும் நடக்கிறது...
நம்பிக்கைதான் வாழ்க்கை இல்லையேல் நரகம் தான்...
அன்னையர் தின வாழ்த்துக்கள்..
நமிக்கைதானே வழ்க்கை. நம்பிக்கை இல்லா வாழ்கை நரகம்.
சிறப்பான கருத்து.
அன்னையர் தினத்தில் இத்தகைய பெண்களுக்கு மனவலிமை கொடுப்பது பற்றிச் சிந்திக்கத் தோன்றுகிறது.
நன்றி சௌந்தர் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி ஈஸ்வரி அவர்களே
நன்றி முருகானந்தன் ஐயா அவர்களே
பல பெண்கள் வாழ்வில்
சந்தேக வலையில் சிக்கி
சந்தோஷ வாழ்க்கையை இழந்து
போலியாய் சிரித்து வாழ்கின்றனர்..
நம்பிக்கையே வாழ்க்கை
Post a Comment