நாம் ஒருவருக்கு உதவி செய்கின்றோம் . இன்னொரு சமயத்தில் எமக்கு ஒருவர் உதவி செய்கின்றார் . சிலருக்கு நன்றிக்கடனை திருப்பி செய்யலாம் . சிலருக்கு நன்றிக்கடனை செலுத்த முடியாது . அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் நாம் பெரிதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம் . அது நாம் எந்த ஜென்மத்திலும் திருப்பி கொடுக்க முடியாது .
நாம் எமது அப்பா, அம்மாவுக்கு நல்ல ஒரு பிள்ளையாக இருந்தாலே போதும் . அவர்களின் மனம் கோணாத படி நடந்து கொள்ள வேண்டும் . அதுவே நாம் செய்யும் பெரும் உபகாரியம் . எமக்கெல்லாம் இறைவன் ஒருவன் இருக்கிறார் . அவருக்கு நாம் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம் அல்லவா ?
நாம் எம் மீது அன்பு கொண்டுள்ளவர்களுக்கு நாம் எமது அன்பையும் செலுத்துவதே நன்றிக்கடன் . எமது நண்பர்களுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட்டு இருக்கிறோம் . நண்பன் என்ற காரணத்தால் அவன் எமக்கு எவ்வளவோ உதவி செய்கின்றோம் . கடன் வாங்கினால் அதை திருப்பி கொடுத்தால் அந்த கடன் முடிந்துவிடும் .
அன்பு கொண்டவர்களின் அன்புக்கு நிகர் ஏது? தாய், தந்தைக்கு கடன் தீர்க்க முடியாது ? அன்புக்கு நிகர் அன்பு . அது ஆயுள்வரைக்கும் தொடர வேண்டும் .
2 comments:
அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்...
நன்றி சௌந்தர்
Post a Comment