சங்ககாரவின் பொறுப்பான ஆட்டம் இலங்கை அணியை தூக்கி நிறுத்தியது . இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும் , பொறுப்பான ஒரு வீரராகவும் , இலங்கை அணியின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர், தலை சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் திகழ்கிறார் சங்கா . இடதுகை துடுப்பாட்ட வீரர் .
ஒருநாள் போட்டி என்றாலும், டெஸ்ட் போட்டி என்றாலும் சரி இவர் ஒரு திறமையான அதிரடியான , பொறுப்பான , சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடும் வீரர் . டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்தவர்களின் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார் .
இதில் முதல் இடத்தில் டான் பிராட்மேன் (12), லாரா (9), இப்போது சங்கா (8 ) இரட்டை சதங்களை பெற்று உள்ளார் . கூடிய கெதியில் இரண்டாம் இடத்தை பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கிறது . ரசிகர்கள் எல்லோரினதும் அவாவும் கூட .
No comments:
Post a Comment