எல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் . ஆசைப்படுகிறார்கள் . ஆனால், அவற்றை செயல்வடிவில் செய்கிறார்களா ? இல்லையே .
எல்லோரும் ஒவ்வொரு உடல்வாகுடனும் ஒருவர் கறுப்பாகவும் எடுப்பாகவும் தெரிவார் , ஒருவர் குண்டாகவும் வெள்ளையாகவும் தெரிகிறார் . இப்படி மனிதனுக்கு மனிதன் உருவம் , வடிவம், குணங்களில் எல்லோரும் வித்தியாசப்படுகிறோம் இல்லையா ? ஆணோ , பெண்ணோ யாராகினும் அழகாய் இருக்க ஆசைப்படுகிறார்கள் . உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள் .
நாங்க ஜிம்முக்கு போறம் , உடம்பை குறைக்கிரம் என்று போய் இரண்டு மாசத்தில ஜிம்முக்கு போறதா நிப்படினால் பலன் கிடைக்குமா ? நமது மனதில் சந்தோசங்கள் கூட கூட எமக்கு உடம்பு வைக்கிறது . நாம் கவலைபட்டு , துன்பப்பட்டு , உணவை கவனிக்காது , நம்மையே நாம் கவனிக்காது விடும் போது உடம்பு மெலிகிறது . நமது ஆரோக்கியம் குறைகிறது . நோய்கள் வந்து சேர்கின்றது . என்னதான் செய்வதப்பா ? என்று பெருமூச்சு விடுகிறோம் .
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடியுங்கள் . அடுத்து அதிகாலையில் சீக்கிரம் எழும்புங்கள் . கையை , காலை அசைத்து கொஞ்ச நேரம் உடல்பயிட்சி செய்யுங்கள் . மனதை ஒருநிலைப்படுத்துங்கள். கொஞ்ச நேரம் மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுங்கள் . தெய்வீக பாடல்களை கொஞ்ச நேரம் கேளுங்கள் . மனதுக்கு இதமான சந்தோசமான இயற்கையை ரசியுங்கள் . சூரியன் உதிப்பது , பச்சைபசேல் மரங்கள் , கடற்கரை அலைகள் என்று இயற்கையை கொஞ்சம் ரசியுங்கள் . மனதுக்கு இதமாக இருக்கும் .
காலையில் எழுந்தவுடன் போதிய நேரம் நடக்கவும் , ஓடவும் . இப்படி தொடர்ந்து செய்து வரும் போது உங்களது உடம்பை நீங்கள் ஸ்லிம்மாக வைத்திருக்க முடியும் . தேவையில்லாத ஊளைசதைகளை குறைக்கலாம் . உடம்பும் கட்டுக்கோப்பாக இருக்கும் . பச்சைக்காய்கறி வகைகளை உணவில் ஒவ்வொரு நாளும் சேர்த்துக் கொள்ளுங்கள் . பலன் கிடைக்கும் .
11 comments:
இதையெல்லாம் செய்தால் ஸ்லிம்மாகிவிடலாம் தான்..
ஆனால் இதை கடைப்பிடிப்பதுதான் படினம்...
மிகவும் எளிமையாக கருத்துக்கள்...
நல்ல தகவல்கள்...
உதாரணமாக காலை எழுந்தவுடன் குறைந்தது அரை லிட்டர் தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று மருத்துவர் உள்பட அனைவரும் சொல்கிறார்கள் நானும் முடிவெடிக்கிறேன்...
ஆனால் அதை தினமும் பின்பற்ற முடியவில்லை...
நூறு ரூபாய் ஸ்கிப்பிங் கயிறு, முதல் நாள் ஐம்பது ஜம்ப், அடுத்த நாள் நூறு என்று ஒரு மாதம் நூறு ஜம்ப் அடித்தாலே போதும்...
கணிணி முன் நிறைய நேரம் உட்கார்ந்து செலவழிப்பது,இரவில் வெகு நேரம் கண்விழித்திருப்பதும் உடல் பருமனுக்கு காரணமாக கூறப்படுகிறது.நீங்கள் கூறியுள்ள குறிப்புகள் கண்டிப்பாக உதவும்.நன்றி.
ஆசையாத்தான் இருக்கு ஆனால் ஆசையை சோம்பல் வென்று விடுகிறது.
ம்ம் இதுதான் பிரச்சனையே . நன்றி சௌந்தர்
நன்றி ஜீவா . தகவலுக்கும் , வருகைக்கும்
நன்றி செழியன் . தகவலுக்கும் , வருகைக்கும்
ம்ம்ம்ம்ம்ம் உண்மைதான் . நன்றி பாலா
i am read all ur post madam ,i want more many information
BY
UNGAL
C.RAVI.M.Sc.B.Ed.,
Plz tell how to increase weight
Post a Comment