எல்லோரும் தம் சொந்தக்காலில் மற்றவர் துணை இன்றி தான் சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்த வேண்டும் . உழைத்து , சம்பாதித்து தனது குடும்பத்தை காக்க வேண்டும் . இன்று ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் வசதியாகவும், சந்தோசமாகவும் வாழ முடியும் .
இதில் பலர் காலையில் எழுந்து தமது கடமைகளை செய்து வேலைக்கு செல்கிறார்கள் . இன்னும் சிலர் காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் பத்து மணிக்குத்தான் காலையில் எழும்புகிறார்கள் . அவதியாக உணவு உண்டது பாதி , உண்ணாதது பாதி என அவதியாக வேலைக்கு செல்கிறார்கள் . இன்னும் எத்தனை பேர் வேலைக்கு செல்லும் நாட்களை விட வேலையில் லீவு எடுக்கும் நாட்கள் அதிகம் . இப்படி எத்தனை பேர் ???
சிலர் சாப்பிட்ட கோப்பையில் இருந்து , குடித்த தேநீர் கோப்பை கூட கழுவி வைக்க மாட்டார்கள் . எல்லாம் சோம்பல்தனம் தான் . சிறியவர்கள் தான் அதிகம் சோம்பேறித்தனமாக இருக்கிறார்கள் . படிக்க சொன்னால் புத்தகத்துடன் அப்படியே தூங்கி விடுகிறார்கள் . டிவி பார்த்தால் டிவி ஓடிக்கொண்டு இருக்கும் , ஆனால் அவர் தூங்கி நல்ல குறட்டை இழுப்பார் . பேப்பர் வாசித்து கொண்டு தொங்கி தூங்கி , தூங்கி விழுவார்கள் . இப்படி ஏராளம் .
காலையில் சுறுசுறுப்பாக எழுவதில் தான் நமது ஆரோக்கியம் இருக்கிறது . சந்தோசமாகவும் , துடுதுடுப்புடனும் இருக்க முடியும். சுறுசுறுப்பாக அன்றைய நாளை கழிக்க முடியும் . ஆனால், காலையில் நேரம் செல்ல எழுந்து , சுறுசுறுப்பின்றி , சோம்பேறித்தனமாக இருந்தால் அன்றைய நாள் எப்படி இருக்கும் ?
இரவில் நேரத்துக்கு உறங்கச்சென்று காலையில் நேரத்துடன் எழும்புங்கள் . உங்களது சோம்பேறித்தனத்தை உதறித்தள்ளுங்கள் . மற்றவர்கள் போல் சுறுசுறுப்போடு இருங்கள் . எந்த வேலையையும் அலுக்காமல், சோம்பல் இல்லாமல் துரிதமாகவும் , விரைவாகவும் செய்யுங்கள் .
அலுப்பாக , சோம்பலாக இருந்தால் ஒரு கப் தேநீர் , குளிர்பானம் ஏதாவது அருந்துங்கள் . உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும் . சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சோம்பேறித்தனம் வேண்டாமே . சுறுசுறுப்புடன் இருக்கவும் .
11 comments:
நான் சுறுசுறுப்பாயிட்டேன்...
சோம்பல்தான் முன்னேற்றதின் முதல் எதிரி. சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சகோ...
கமெண்ட் போடா சோம்பலா இருக்கு .. அப்புறம் போடுறேன்
இன்று என் வலையில்
தலை, தளபதி மற்றும் புத்தர்
எனது தளத்தில் நான் சோம்பலாக எழுதிய பதிவு இலங்கையில் GCE O-L, GCE A-L, University மாணவர்களுக்கு உதவ ஒரு தளம்-பரீட்சை வழிகாட்டி
நன்றி சௌந்தர் . எப்பவும் சுறுசுறுப்பாக இருங்க
நன்றி பாலா .
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி ராஜா
நன்றி சிறி
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி நான் இப்பொழுது இருந்தே சுறுசுறுப்பு ஆகிவிட்டேன்
Ana sombala epdi thadukarathunu solaliye kalai seekarama enthirikarathum kastama than iruku athuku ena pandrathu
Post a Comment