Monday, November 21, 2011

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா ? திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது ரொக்கங்களிலா? உங்கள் பதில் என்ன ?


http://ctsconceptsandevents.com/wp-content/uploads/2011/09/wedding-rings-2-300x224.jpg
ஆணாக இருந்தாலென்ன , பெண்ணாக இருந்தாலென்ன நிச்சயம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் . அப்போதுதான் வாழ்வின் தொடக்கத்தை ஆரம்பிக்கிறார்கள் . திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்படுபவையும் உண்டு . ஆனால், சில திருமணங்கள் இருமனம் ஒன்று சேர்ந்து காதல் திருமணங்களிலும் முடிகின்றன .

என்னப்பா நீ இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா என்று கேட்டால் அவன் சொல்லுவான் எனக்கென்று ஒருத்தி எங்க பிறந்து , எங்க வந்து கொண்டு இருக்கிறாளோ தெரியவில்லை . அவளுக்காக காத்து இருக்கிறேன் என்கிறான் .
http://www.binsar.com/photos/uncategorized/dowry.jpg
இன்னுமொருவன் நான் எனக்கென்று ஒரு நல்ல வேலை தேடி கைநிறைய சம்பாதித்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் . அப்போதுதான் எனக்கு வரப்போகின்ற மனைவியை கண்கலன்காது காப்பாத்த முடியும் என்கிறான் . இது படித்த , திறமையான , புத்திசாலியான ஒருவன் சொல்வது .

இதே பெண்களிடம் கேட்டால் ; என்னடி உனக்கு எப்போ கல்யாணம் என்றால் அவள் சொல்வாள் எங்கு இருக்கிறானோ , என்ன செய்கிறானோ யார் கண்டது . சந்தையில் காய்கறிகளுக்கு ஏலம் பேசுவது போல் எமக்கு எப்போது ஏலம் பேசி முடிவதோ தெரியவில்லையே என்கிறாள் .
http://4.bp.blogspot.com/-LDz2BuE9_qI/Tc6vWCx83gI/AAAAAAAAAEg/qAsAQDt8gIQ/s1600/My_tears_hold_no_weight_by_Sandy515.jpg
இன்னொருத்தி நான் சம்பாதிக்கிறேன் , நல்ல சம்பளம் பெறுகிறேன் இருந்தும் என்னிடமும் சீதனம் எதிர்பார்க்கிறார்கள் . அம்மா , அப்பா படிக்க வைத்தார்கள் . பணம் அதிகம் செலவழித்து படிக்க வைத்தார்கள் . நானும் படித்து பட்டம் பெற்று நல்ல சம்பளம் பெறுகிறேன் . இருந்தும் என்னிடமும் வரதட்சனை கேட்கிறார்கள் . நான் கல்யாணம் செய்து உழைத்து அம்மா , அப்பாவிடமா கொடுக்க போகிறேன் . இல்லையே . ஆனால் , எனது பெற்றோர் என்னை படிக்கவும் செலவழித்து , இனி அவர்கள் கேட்கும் லட்சங்களையும் கொடுக்க முடியுமா ? அதனால் , நான் அவர்கள் கேட்கும் பணத்தை நானே சேமித்து முடித்தவுடன் தான் எனக்கு கல்யாணம் என்று உறுதியாக என் பெற்றோரிடம் கூறி விட்டேன் என்கிறாள் . 
http://s2.hubimg.com/u/4318425_f260.jpg
என்னடா இது படிச்சாலும் இப்படி கேட்கிறார்கள் ? படிக்காவிட்டாலும் இப்படி கேட்கிறார்கள் என்ன வாழ்க்கைடா?

சரி வேலை செய்யும் இடங்களில் ஒருவருக்கு ஒருவர் பேசி இருமனங்கள் ஒன்று சேர்ந்து விட்டால் நிம்மதி என்று பார்த்தால் அங்கும் தலை இடி தான் . அம்மா நான் உனக்கு ஏற்ற மருமகளை பார்த்து விட்டேன் . நீ போய் பார்த்து பேசு என்பான் . அவர்கள் போய் என்ன பேசுவார்கள் ஏதோ பையன் விருப்பபட்டுட்டான் சரி . எங்களுக்கும் ஓகே . எவ்வளவு கொடுப்பீங்க ? ?? அவ்வளவுதான் . போச்சடா போ .அதிலும் சில திருமணங்கள் நடக்கும் . சில திருமணங்கள் தட்டுப்படும் . அவனும் என்ன செய்வது பெற்ற்றோர் எங்களுக்கு பிடிக்கவில்லை . உனக்கு வேறு ஒரு பெண் பார்க்கிறோம் என்று சொல்வார்கள் . நாங்க உன்ன கஷ்டப்பட்டு வளர்த்தோம் . நீ யார் சொல் கேட்கப் போகிறாய் என அவனை அடக்கி வைத்து விடுவார்கள் ? அவனும் என்ன செய்வது தலையை ஆட்ட வேண்டியது தான் . 

இப்படித்தான் பல வீடுகளில் நடக்கிறது . என்னதான் உலகம் மாறினாலும் , தொழில் நுட்ப வசதி வாய்ப்புகள் வந்தாலும் இந்த சீதனம் / வரதட்சனை பிரச்சனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . சிலர் எல்லோருக்கும் தெரியும்படி வாங்குகிறார்கள் . சிலர் அவருக்கும், இவருக்கும் தெரியாமல் உள்வீட்டுக்குள் கதைத்து பேசி முடித்து விடுகிறார்கள் . 
http://2.bp.blogspot.com/-KRIMJWExq2g/Thb0k2ZTlpI/AAAAAAAAACE/vhtrWxNL9m0/s1600/Bands.jpg
எத்தனை திருமணங்கள் வரதட்சனை கேட்டு கொடுக்காதபடியால் இடையில் நிறு இருக்கின்றன . எத்தனை திருமணங்கள் வரதட்சனை இல்லாமல் நடைபெறாமல் இருக்கின்றன . பணமாகவோ , நகையாகவோ , ஏதாவது சொத்தாகவோ அதாவது வீடு , காணி போன்றன இருக்க வேண்டும் . இப்படி இருக்கிறது நிலைமை . நம் தமிழர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக அல்லவா இது மாறிக் கொண்டு இருக்கிறது . அதுக்குள் போட்டியும் இருக்கிறது என்ற மகனுக்கு என்ன குறைச்சல் . இவ்வளவு அவன் சம்பாதிக்கின்றான் . இவ்வளவு இலட்சம் கொடுத்தால் என்ன என்று மகனின் தாயார் கேட்கின்றார் .

பெண்ணை பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் ஒரு திருமணத்தை செய்து முடிப்பதற்க்கு . இப்போதைய படித்த இளையர்கள் எங்களுக்கு சீதனமே வேண்டாம் . பெண் நல்ல குணாம்சமுள்ள பெண்ணாக இருந்தால் சரி என்கிறார்கள் . ஆனால் இந்த மகன்மாரை பெற்ற தாய்மார்கள் தான் விடாப்பிடியாக , பிடிவாதமாக இருக்கிறார்கள் சீதனம் வாங்குவதற்க்கு. 

இந்த சமுதாயம் திருந்துவது எப்போது ? இப்போது காதல் கல்யானம்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறது . பெண் காதலித்து ஒருவரை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக பெற்ற்ரோரிடம் தெரிவிக்கிறாள் . பெற்றோர் யாரம்மா அந்த பையன் என விசாரித்து வீடு செல்கிறார்கள் . அங்கு சீதனப் பேச்சும் இடம்பெறுகிறது . சமுதாயத்தில் ஒருவர் , இருவர் திருந்தி பிரயோசனம் இல்லை . எல்லோரும் திருந்த வேண்டும் . எல்லோரும் வாழ வேண்டும் . வசதி , வாய்ப்புகள் இல்லாமல் எத்தனை பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் தாய்மாருடன் தமது காலத்தை வீண் பொழுது கழிக்கிறார்கள் . 
http://dwqnukksd7frn.cloudfront.net/preset_3/dowry_no2.jpg
எல்லோரும் இவற்றை உணர வேண்டும் . நாம் திருந்த வேண்டும் . இந்த சமூகம் திருந்த வேண்டும் . நம் இனம் திருந்த வேண்டும் என்பதே எல்லோரினதும் அவா . இப்போது சொல்லுங்கள் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா ? திருமணத்தை ரொக்கங்கள் தீர்மானிக்கின்றனவா என்று ?


6 comments:

SURYAJEEVA said...

அழகில்லாத பெண்களுக்கு வரதட்சணை கொடுத்தால் தான் கல்யாணம் நடக்கிறது என்று சிலர் சப்பை கட்டு கட்டும் பொழுது.. நீங்க எதிர்பார்க்கும் மாற்றம் பெண்கள் ரொக்கம் கேட்க்கும் ஆண்களுக்கு கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம் என்று கூறுவதில் உள்ளது

குறையொன்றுமில்லை. said...

ஆமா திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்ரன?

Pandian R said...

மதிப்பிற்குரிய பதிவர் அவர்களே,
நீங்கள் ஊதுவது அலுத்துப்போன அபாயச் சங்கு. 80 களில் சொல்லியிருந்தால் 800 ஓட்டு விழுந்திருக்கும். இது 2011. இந்தக் காலம் என்பது பெண்கள் கண்டிசன்கள் போட ஆரம்பித்திருக்கும் காலம்.

இந்தக் காலத்தில் வெகுஜன ஊடகங்களில் வந்த சில உண்மைகள் உங்களின் பழமை பேசும் உள்ளத்திற்கு எடுத்து உரைக்கிறேன்.

1. மருமகள்களால் கொடுமைப்படுத்தப்படும் மாமியார்கள் எண்ணிக்கை விருவிருவென உயர்ந்து வருகிறது

2. குடும்பம் என்கிற சூழல் முற்றிலும் மாறி - கூட்டுக் குடிகுடித்தனம் என்பது தனிக்குடித்தனம் ஆகி - தனிக்குடித்தனம் அணுக்குடுத்தனமாகவிட்டது (atomic family).

3. வரதட்சணை வழக்குகளில் பெரும்பாண்மை போலி (பிராடு) என்று அரசாங்கமே ஒத்துக்கொண்டுள்ளது

4. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் எண்ணிக்கை அதிகமாவதை பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் சொல்கிறது.

எங்கப்பா இருக்கீங்க?

Pavi said...

நன்றி ஜீவா

Pavi said...

நன்றி லக்ஷ்மி அம்மா அவர்களே

Pavi said...

fundoo நண்பரே உங்களுக்கு அலுத்துப் போனதாக இருக்கலாம் . ஆசிய நாடுகளில் நடப்பவை இவை. அதனை தான் நான் சொல்கிறேன் . நாங்களும் இந்த காலத்தில் தான் இருக்கிறோம் நண்பரே . நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் .