Wednesday, March 31, 2010

உங்கள் சிந்தனைக்கு

http://ladyfi.files.wordpress.com/2009/01/heart-on-fire.jpg 
இந்த படத்தை பார்த்து உங்களுக்கு தோன்றும் எண்ணத்தை கவிதையாய் வர்ணியுங்கள். உங்களின் கவிதைகள் எப்பிடி இருக்கிறது என்று பார்ப்போமே ..............தொடருங்கள் . கவிதை இரு வரிகளிலும் இருக்கலாம் .

18 comments:

akila said...

எனது இதயம் நெருப்பாக
எரிகிறது உனக்கு
அதில் என்ன சந்தோசம் ???

Anonymous said...

வாழ்க்கை எனக்கு
நரகம் ஆகியது
எனது இதயம்
நெருப்பாக
எரிந்து கொண்டு
இருக்கிறது ...........


வைஷ்ணவி

Anonymous said...

வறுமையினால் எனது
பிள்ளைகளை வாழ வைக்க முடியவில்லை
நான் என்ன செய்வது ?
என் இதயம் வெடித்து
நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........

விமலா

Anonymous said...

என் வீட்டின் வறுமையால்
பிள்ளைகள் வாடுகிறார்கள்
என் இதயம் நெருப்பாக எரிகிறது
என் மனதுக்குள்ளே ...........

விமலா

ஸ்ரீ.... said...

எரிவது இதயமல்ல!
எண்ணங்கள்....

ஸ்ரீ....

(பின்னூட்டத்துக்கு இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா!)

நித்தி said...

அன்பே எனக்காக உன்மனக்கதவு திறக்கும்
என எதிர்பார்த்தேன்.....

ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவு
என அறிந்துகொண்டேன்....

நெருப்பாக என்னுள் எரியும் என் இதயத்தை
போட்டோஷாப்பில் வெளிக்காட்டி இருக்கிறேன்....



ம்ம் என்ன மாதிரி ஒரு தொழில்நுட்ப பதிவாளர எல்லாம் கவிதை எழுத சொன்னா என்ன எழுதரது?....

என்னமோ பவி உண்மைய சொல்லபோனா இந்த படத்த பார்த்ததும் எனக்கு விக்ஸ் மிட்டாய் தான் ஞாபகத்திற்க்கு வருது....

நன்றி

S Maharajan said...

உன் பார்வையில் தெரியும்
ஈரம்!
ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!
நான் அருகில் வரும் போதெல்லம்
நெருப்பாய் சுடுகிறதே!

prince said...

எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம்
அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!

Pavi said...

ம்ம்ம்ம் நன்றாக இருக்கிறது .
நன்றி அகிலா

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் .
நன்றி வைஷ்ணவி

Pavi said...

நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........
நல்ல வரிகள் .
நன்றி விமலா

Pavi said...

நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........
நல்ல வரிகள் .
நன்றி விமலா

Pavi said...

எரிவது இதயமல்ல!
எண்ணங்கள்....
ம்ம்மம்மம்ம்ம்ம்
நல்ல வரிகள் ஸ்ரீ
எல்லோருக்கும் திறமை இருக்கு தானே .

Pavi said...

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை நித்தியானந்தம்.
"ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவு
என அறிந்துகொண்டேன்...."
நல்ல வரிகள்.

Pavi said...

நல்ல வரிகள் .
"உன் பார்வையில் தெரியும்
ஈரம்!
ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!"
நன்றி மகாராஜன்

Pavi said...

"எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம்
அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!
ராஜன் அருமையான வரிகள்" .
நன்றி

ஜாபர் அலி said...

தங்கத்திலே செய்யப்பட்டதுதான் என்றாலும்
உன் தணலால்
எரிகிறது
என் இதயம்.

கார்த்திகேயன் said...

சுட்டுப் பார்க்கிறான் ராமன்
சுடர்விடுகிறாள் சீதை
இருந்தாலும் ஒரு இதயம்
வாழவும் மறுத்து
சாகவும் மறுத்து
வேகதுடிக்கிறது