Monday, July 19, 2010

டெங்கு காச்சல் ஆகோரம்

http://thepassengernews.files.wordpress.com/2009/03/mosquito-del-dengue.jpg
நமது நாட்டில் இப்போது ஆட்டிபடைத்து கொண்டிருக்கிறது இந்த டெங்கு காச்சல் . பல உயிர்களை காவு கொண்டுள்ளது . தினம் தினம் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் டெங்கு காச்சலால் இருவர் உயிர் இழப்பு , மூவர் உயிரிழப்பு என்று . டெங்கு காச்சலுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரித்து செல்கின்றதே தவிர குறைவதாக இல்லை .
http://www.topnews.in/files/dengue7.jpg
உயிர் இழப்புகள் தினம் , தினம் அதிகரிக்கிறது . பலவகையான வேலை திட்டங்களை அரசு அமுல்படுத்தி வருகின்ற போதிலும் நுளம்புகள் எல்லாவற்றையும் அளிக்க முடியவில்லை . குப்பைகளை தெருவில் கொட்டாதீர்கள் . உரிய இடத்தில் கொட்டவும் என்றும் , வீட்டையும் சுற்று புற சூழலையும் சுத்தமாகவும் , துப்பரவாகவும் வைத்திருக்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . எனினும் , அதனை எல்லா மக்களும் நடைமுறை படுத்துவதாக தெரியவில்லை . அலட்சியமாக இருப்போரும் உண்டு . வரும் முன் பாதுகாப்பாக இருப்பதை விட்டு விட்டு வந்தபின் பாதுகாப்பாக இருந்து என்ன பயன் . இதுதான் நடக்கிறது இன்று நாட்டில் .
http://naturalunseenhazards.files.wordpress.com/2009/12/dengue_gd.gif
பற்பல நோய்கள் வந்து மனிதனை தாக்குகின்றன . பல நோய்களால் மனிதன் உயிரிளைக்கவும் நேருகிறது . தினம்தினம் நோய்களாலும், விபத்துகளாலும் , இயற்கை அழிவுகளாலும் , குண்டு தாக்குதல்களாலும் உலகில் மனிதர்கள் இறப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது . அது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே செல்கிறது .
http://www.fcagr.unr.edu.ar/Extension/Informes%20tecnicos/dengue/dengue1.jpg
பன்றிகாச்சல் , எலிகாச்சல், மலேரியா காச்சல் போன்றவற்றுடன் இப்போது டெங்கு காச்சலுடனும் மனிதன் போராட வேண்டி உள்ளது . கொழும்பில் பல பகுதிகளிலும் , வவுனியா , பதுளை , யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர் .
http://www.sundayobserver.lk/2009/06/28/z_p04-Dengue.jpg
டெங்கு நோய்க்கு எல்லோரும் பலிக்கடா ஆக்கப்படுகின்றனர் . அண்மையில் ஒரு வைத்தியர் டெங்கு நோயினால் உயிர் இழந்துள்ளார் . இந்த டெங்கு நுளம்பு யாரையும் விட்டு வைக்குதில்லை . மாணவர்கள் , ஆசிரியர்கள், வைத்தியர்கள் , பொது மக்கள் என சகலரையும் போட்டு தாக்குகிறது . யாரும் விதி விலக்கல்ல .
http://www.topnews.in/files/dengue223.jpg
பல இடங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன . சிரட்டை, பிளாஸ்டிக் டப்பிகள், வெற்றுப் போத்தல்கள், மரப் பொந்துகள் போன்றவற்றில் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றன . சுத்தமாக இல்லாமையினாலே இந்த டெங்கு நோய் பரவக் காரனமாகுகிறது .
http://english.vietnamnet.vn/dataimages/200907/original/images1828402_dengue-191-09.jpghttp://www.isciii.es/htdocs/centros/medicinaTropical/img/Mapa_dengue.jpg
ஆசிய நாட்டில் தாய்லாந்தில் மட்டுமே டெங்கு நோய் இருந்து வந்தது . ஆனால் இப்போது இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளையும் பாதித்து வருகிறது . இதுவரை டெங்கு நோய்க்குரிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை . அண்மையில் ஒரு வைத்தியர் பப்பாளி மரத்தின் இலைகளின் சாரை பிழிந்து தேனுடன் கலந்து குடித்தால் நோய் குணமாகும் என்று கூறி இருக்கிறார் . அது ஏற்ற மருந்தா , இல்லையா என்பது இன்னும் நிரூபிக்க படவில்லை .
http://www.medindia.net/afp/images/Health-disease-dengue-Asia-vaccine-27931.jpg
பல இளம் சிறார்கள் எல்லோரும் இறக்கின்றனர் இந்த டெங்கு நோயினால் . பல நாடுகளில் இருந்து நோய்  தடுப்பு மருந்தை இறக்குமதி செய்கிறோம் என்கிறார்கள் . இன்னும் வந்து சேரவில்லை .நாளுக்கு நாள் மக்கள் இறந்து மடிகின்றனர் . ஒரு பிள்ளையை பெற்று வளர்த்து அதை டெங்கு காச்சலால் பலி கொடுத்த பெற்றோர் , உயர்தரம் படித்து கொண்டு இருக்கும் மாணவன் என பல மக்களின் கண்ணீர் சொரிந்து கொண்டு இருக்கின்றன .
http://diganaoadengue.pbworks.com/f/dengue-mosquito.jpg
டெங்கு அபாயமானது , டெங்கு ஆபத்தானது , டெங்கு உயிராபத்தை உண்டு பண்ண கூடியது . இவற்றுக்கு உரிய தீர்வு கண்டு டென்குவில் இருந்து மக்கள் அனைவரையும் காத்து கொள்ள வேண்டியது உரிய அதிகாரிகளில் கடமையும் , மக்களது கடமையும் ஆகும் . மக்களும் தத்தமது வீடுகளையும், சுற்று புற சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் .






3 comments:

Anonymous said...

nalla pathivu.
ellorukkum payanpadum.


mano

'பரிவை' சே.குமார் said...

Thevaiyana nerathil mukkiya pathivu...

vazhththukkal.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தற்போதைய கால பிரச்சனைகளில் ஒன்று டெங்கு. காலத்துக்கு ஏற்றவாறு பதிவுகள் போடத்தானே வேண்டும் . நன்றி குமார் உங்கள் வாழ்த்துக்கும் , கருத்துக்கும் .