பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி எல்லாவகை ரசிகர்களையும் கொள்ளை கொண்டவர் . ஏ.ஆர்.ரஹமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தம் இட்டாள் என்ற திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே "என்ற பாடல் தான் சின்மயி பாடிய முதல் திரைப்பட பாடல் ஆகும் . ரஹுமானின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார் .
இவர் பல திரைப்படங்களில் பின்னணி குரல் தந்துள்ளார்,சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா ,உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷாக்கு,சத்தம் போடாதே படத்தில் பத்மப்ரியாவிற்கு,தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு,ஜெயம்கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு,சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டியிற்கு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவுக்கும் குரல் கொடுத்துள்ளார் .
விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாடல்களாகட்டும், டப்பிங் ஆகட்டும் எனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அந்த கிரடிட் மொத்தமும் இயக்குநர் கௌதம் சாருக்குதான் போய்ச் சேரும். அவர் எதை செய்யச் சொன்னாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். த்ரிஷாவின் ஜெஸி வேடம் இன்ட்ரஸ்டிங்கானது. அந்த கேரக்டருக்கு டப்பிங் பேசியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார் சின்மயி . அந்த படத்தில் "உயிரே உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக " என்று தொடங்கும் பாடலை தேவனுடன் சேர்ந்து சின்மயியும் பாடி உள்ளார் .
ஆதவன் படத்தில் இடம்பெற்ற "வாராயோ வாராயோ " பாடலில் உன்னி கிருஷ்ணனுடன் சேர்ந்து சின்மயியும் சேர்ந்து பாடி உள்ளார் . அந்த பாடல் சூப்பர் ஹிட் பாடல் . பாடலுக்கு நிறைய விருதுகளும் கிடைத்திருக்கிறது. சிவாஜி படத்தில் இடம் பெற்ற "சஹானா தூரல் தூவுதோ" என்ற பாடலைப் பாடியவர் சின்மயி. சூப்பர் ஹிட் பாடலான இந்தப் பாட்டுக்காக, அவருக்கு தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதும் கிடைத்துள்ளது இவருக்கு .
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'எந்திரன்' படத்திற்காக ஜாவ் அலியுடன் இவர் இணைந்து பாடிய 'கிளிமாஞ்சாரோ...' என்கிற பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்திரன்' படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு நிறைய பாராட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு. 'சிவாஜி' படத்திற்குப் பிறகு மறுபடியும் சூப்பர் ஸ்டாரோட, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட காம்பினேஷனில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கு என்றும் கூறுகிறார் சின்மயி .
இதுவரை கிட்டத்தட்ட ஐநூறு பாடல்கள் பாடி இருக்கும் சின்மயி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியை தொகுத்து வழங்கினார்.மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சங்கீத மகா யுத்தம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்கள் மூலம் பாலிவுட் உலகையும் அசத்தினார்.
சின்மயி பாடிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்கள் இவைதான் . ஒரு தெய்வம் தந்த பூவே – கன்னத்தில் முத்தமிட்டால், கிறுக்கா கிறுக்கா – விசில், பூந்தேனா – ஈரநிலம், என்ன இது – நள தமயந்தி, என்னுயிர் தோழியே – கண்களால் கைது செய், ஒப்பணகார வீதியிலே – கிரி, எங்கு பிறந்தது – விஷ்வதுளசி, காதலிக்கும் ஆசையில்லை – செல்லமே, சின்ன சின்ன – கண்ணாடிப் பூக்கள், சில் சில் – அறிந்தும் அறியாமலும் போன்ற பாடல்கள் எனக்கு பிடித்தவை .
மேலும் பல நல்ல பாடல்களை சின்மயி பாடி சிறந்த பாடகியாக வலம்வர வேண்டும் என்பதே எம்மை போன்ற ரசிகர்களின் அவா.
17 comments:
She is Good plyback singer
nice post Pavi
Thanks
எனக்கும் மிகப்பிடித்தவர் சின்மயி.
நல்ல பகிர்வு பவி.
எனக்கும் மிகப்பிடித்தவர் சின்மயி.
நல்ல பகிர்வு பவி.
பூ திரைப்படத்தில் வந்த அந்த "ஆவாரம்பூ அந்நாளில் இருந்து" என்ற அற்புதமான பாடலை விட்டுவிட்டீர்களே!
நல்ல பதிவொன்று சின்மயிக்கு அப் பெயர் வரக் காரணம் அவர் பிறக்கம் போது அவர் விரல்கள் சின்மயி முத்தரை போல் இருந்ததாம்... அவருடையா வெற்றிபெறப்போகும் பாடல் பற்றி பார்க்க விரும்பினால் இங்கே வாங்க சகோதரி...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_19.html
நீண்ட நாளாக ஆளை காணவில்லை
நன்றி மகாராஜன்
நன்றி குமார்
எனக்கு தெரியாது .
நினைவு படுத்தியமைக்கு நன்றி.
நன்றி ஜனா
நன்றி சுதா
மேலும் பல நல்ல பாடல்களை சின்மயி பாடி சிறந்த பாடகியாக வலம்வர வேண்டும் என்பதே எம்மை போன்ற ரசிகர்களின் அவா.
repeat
Many Thanks for the post.
Chinmayi is a great singer and good human being/friend.
A good post. I love Chinmayi's voice...and I love her as a person even more.
எனக்கும் பிடித்தவர் சின்மயி
ஆமாம் .
நன்றி சரவணன்
நன்றி ராம்ஜி
நன்றி நண்பரே
நன்றி யோகேஷ்
Post a Comment