Thursday, September 30, 2010

"பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் நானும் பார்த்தேன் நெகிழ்ந்தேன்

http://reviews.in.88db.com/images/stories/bass-enkira-baskaran2.jpg
ஆர்யா , நயன்தாரா , சந்தானம் நடிப்பில் விஸ்வரூப வெற்றியாக திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் "பாஸ் என்கிற பாஸ்கரன்". ஆர்யாவின் நேர்த்தியான நடிப்பும் , சந்தானத்தின் காமெடியும் படத்துக்கு வலு சேர்க்கின்றன .
http://2.bp.blogspot.com/_D00yPSSVl_I/THiTOL_7a7I/AAAAAAAACQI/RIhq24G0yPQ/s1600/Boss-Engira-Baskaran-Hot-sexy-nayantara-04.jpg
வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு இயல்பான கதையம்சம் கொண்ட படமாக மூன்று மணி நேரமும் போவது தெரியாமல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது இந்த படம் . அடிதடி , வில்லன்கள் என்று நாம் பார்த்து பார்த்து புளித்த அம்சங்கள் ஒன்றும் இல்லை . சீரியஸான காதல் கதையில் நகைச்சுவையை கலந்து முழு காமெடி படமா எடுத்திருக்கார், இயக்குநர் ராஜேஷ்.எம். சண்டைகாட்சி, காதை கிழிக்கும் சத்தம் என்று இல்லாமல் அமைதியான குடும்பம், அழகான காதல் என்று தந்திருக்கிறார். கும்பகோணத்தைச் சார்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, தன்னைப் பற்றி அதிகம் கவலைப்படாத இளைஞனாக வருகிறார் நமது பாஸ் .
http://1.bp.blogspot.com/_D00yPSSVl_I/THiUP46zgMI/AAAAAAAACQ4/7nH9tLLF8Ls/s1600/Boss-Engira-Baskaran-Hot-sexy-nayantara-10.jpg
பொறுப்பு இல்லாமல் வெட்டியாக சுற்றித்திரியும் ஒருவன், காதலுக்காக எப்படி பொறுப்புள்ளவனாக மாறுகிறான் என்பதே கதை. வெட்டியாக சுற்றுவதையே வேலையாகப் பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் 'பிட்' அடிக்கிற விஷயத்தில் பிரச்சினை வந்து அதுவே காதலாகி விடுகிறது. தான் காதலிக்கும் நயன்தாராவின் அக்காவே அண்ணனின் மனைவியாக வந்துசேர, உடனே நேரடியாகவே அண்ணியிடம் பெண் கேட்கிறார். வேலைவெட்டியில்லாத உனக்கு எப்படி என் தங்கையைத் தர முடியும் என்று அண்ணி கேட்க, ரோசப்பட்டு நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்று வீட்டை விட்டு வெளியேறும் ஆர்யா, சந்தானத்தின் உதவியோடு எப்படி பணம் சம்பாதித்து, பெரிய ஆளாகி நயன்தாராவை கைப்பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.எல்லோரும் ரசிக்கும் படி காட்சிகளும் அமைந்து இருக்கின்றன . 
http://4.bp.blogspot.com/_D00yPSSVl_I/THiWO0y-nWI/AAAAAAAACRA/OZoVRXXpddQ/s1600/Boss-Engira-Baskaran-Hot-sexy-nayantara-11.jpg
ரொம்பவே அழகாகவும் , இளமையாகவும்  இருக்கிறார் ஆர்யா. இயல்பான  சுட்டித்தனத்தை, இளைஞர் பருவம் வரை கடைபிடித்து ஊரிலும், வீட்டிலும் வெட்டிப் பையனாக பேர் எடுக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். பாக்கெட் நிறைய பிட் வைத்துக் கொண்டு பரீட்சை எழுத கிளம்புவதிலிருந்து தான் ஆரம்பிக்கும் டுட்டோரியலுக்கு ஷகிலாவை டீச்சராக கொண்டு வருவது வரை அமர்க்களப்படுத்துகிறார். அவருடைய டைமிங் ரியாக்ஷன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து, கைதட்டலை அள்ளுகிறார். அவர் கூலிங் கிளாஸ் மாட்டுவதும், கழட்டுவதும் என தன்னுடைய ஒவ்வொரு மேனரிசத்திலும் கதையின் நகைச்சுவை பாதிப்பு இருப்பதால், நல்ல முத்திரையான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆர்யா.

ஆர்யாவின் அண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர்! கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம்! முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம். 
http://4.bp.blogspot.com/_D00yPSSVl_I/THiWQBotPHI/AAAAAAAACRY/XOLRdXw4CzQ/s1600/Boss-Engira-Baskaran-Hot-sexy-nayantara-14.jpg
 இன்னொரு கதாநாயகன் போன்று நடித்து அசத்துகிறார்  சந்தானம்.   ஆர்யாவின் வலது கரமாக இருந்து அவர் படும் அவஸ்தை ஒவ்வொன்றும் சரவெடி.சாணி அள்ளவிட்டால் என் நிலைமை என்ன என்று அவர் யோசிக்கும் போது சிரிப்போ சிரிப்புதான் வருகிறது .படம் முழுக்க வந்து அசத்துகிறார் . ஆர்யா பல இன்னல்களுக்கு ஆளாகின்ற போதிலும், சந்தானம், தன் நண்பனின் வாழ்க்கை  முன்னேறுவதற்கு அவ்வப்போது உதவுகிறார். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக புதிதாக “டுடோரியல்” ஒன்றைதொடங்க  ஆர்யா விரும்ப சந்தானம் ‘கடன்’ வாங்கிக்கொடுத்து அதற்கு உதவி புரிகிறார்.

வட்டிக்கு விடும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் இதில் காமெடியில் அசத்தியிருக்கிறார். அவரது மகனாக வரும் அஸ்வின்ராஜ், கதையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம். சாப்பிடுவதும் தூங்கி வழிவதுமாக இருக்கும் அவர், படிப்பதற்காக முயற்சி செய்கிற காட்சிகளில் சிரிப்பு வெடி.
http://3.bp.blogspot.com/_-fb1VE-IWms/S9V2O48Ax5I/AAAAAAAAAWk/3dHrAlvFAds/s400/boss_engira_baskaran_movie_stills_gallery_photos_01.jpg
நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும்பாடும் அசத்தல். கோபமாக பேசும்போது காமெடி வரணும் என்ற படத்தின் கான்செப்டில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.   கௌரவத் தோற்றத்தில் தோன்றும் ஜீவாவும், தனது பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார். முதல் படத்தின் ஞாபகத்தில் "மாமா ஒரு கோட்டர் சொல்லேன்" என்று கேட்கும் ஜீவாவின் குடிகார குழந்தை முகம் பிரமாதம். 
 
எனக்கு இந்த படத்தில் மேலும் பிடித்த காட்சிகள், வசனங்கள் என்றால் ; ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் எனக்கு பிடித்து இருந்தது . 

வில்லன்களே இல்லாது, நல்ல மனிதர்களை மட்டுமே வைத்து படம் இயக்கியதற்காக படத்தின் இயக்குனரை பாராட்டலாம். ஒரு வில்லன் கூட இல்லாமல் படத்தினை இயக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்! ஜீவா, வில்லன் போன்று காட்டப்பட்டாலும், ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் அவரையும் நல்ல மனிதராக காட்டி விடுகிறார்.இதுவும் எனக்கு பிடித்து இருந்தது . 

ஆர்யா இன்னல்களுக்கு ஆளாகும் போதெல்லாம் அவர் அதிலிருந்து மீள வேண்டும் என ரசிகர்களை ஏங்க வைப்பதிலும், படத்தின் முதல் பாதியில் வரும் கண்தெரியாத சிறுமியை, இரண்டாம் பாதியில் நேர்த்தியாக உபயோகப்படுத்தியிருப்பதிலும், இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் "யார் இந்த பெண்தான்..." பாடல் முனுமுனுக்க வைக்கும் பாடல், மற்ற பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. கும்பகோணத்தில் வாழ்ந்துவிட்டு வந்த திருப்தியை சக்தி சரவணனின் ஒளிப்பதிவு உணர்த்துகிறது. ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கின்ற பேக்ட்ராப் கலரில் பிரேம்களில் அசத்தல் ரசனை.

மொத்தத்தில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தினை நேரத்தை இனிமயாக கழிக்கவும், மனமகிழ்ந்து சிரிக்கவும் ஒரு முறை பார்க்கலாம். தடித்த வில்லன்களோ, அடிதடி காட்சிகளோ, ரத்த காயங்களோ இல்லாது உருவாகியிருப்பதால் குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த படம்! " பாஸ் என்கிற பாஸ்கரன்" என்றதும் நம் நினைவுக்கு வருவது – நண்பன்டா!! படம் முழுவதும் தகுந்த நேரத்தில் உச்சரிக்கப்பட்டிருக்கிறது! எனக்கு படம் பிடித்து இருக்கிறது . படம் பார்த்தேன் , நெகிழ்ந்தேன் .

நண்பர்களே நீங்க இந்த படம் பார்த்துவிட்டீர்களா ? உங்களின் கருத்து என்ன ?

பாடல் வரிகளையும் பாப்போம் . இந்த மூன்று பாடல்களும் எனக்கு பிடித்து இருக்கின்றன .
அட பாஸு பாஸு பாஸு
என் பேரை கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு
என் பேரே தாண்டா பாஸு
(அட பாஸு..)
அட வேலை வெட்டி இல்லை
ரொம்ப பிஸியான புள்ளை
க்ரிக்கேட் ஆடும் போது
அந்த கோபுரம்தான் எல்லை
நான் நல்லவனா கெட்டவனா
யாரும் கேட்டதில்லை

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்



4 comments:

ம.தி.சுதா said...

உண்மை தான் இறுதியாக வந்த படங்களுள் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

Pavi said...

அமாம் சுதா.
நன்றி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

r.v.saravanan said...

படம் பார்த்தேன் ஒரே சிரிப்பு தான்

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எனக்கும் அப்படித்தான்
நன்றி சரவணன்