Wednesday, October 6, 2010

உலக ஆசிரியர் தினம் இன்று

 http://www.indiastime.in/wp-content/uploads/2010/09/Teachers-Day-Cards.gif
இன்று உலக ஆசிரியர் தினம் . ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது .
நல்ல பிரஜைகளை உருவாக்கி அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரிய பெருந்தகைகள் ஆவர் . மாணவர்களின் கற்றல் செயல்பாட்டால் மாணவர் கல்வி நிலையில் சிறந்து விளங்க உதவுவோர் ஆசிரியர்கள் .

பிள்ளைகளை வளர்த்து பெரியாளாக்க வேண்டும் , அவனுக்கு நல்ல அறிவை புகட்டி படிப்பித்து அவன் எதிர்காலத்தில் நல்லவனாகவும், அறிவுள்ளவனாகவும் உருவாக்க வேண்டும் என பெற்றோர் நினைக்கிறார்கள் . அதற்காக பெற்றோர் கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிப்பிக்கிறார்கள் . அவர்களுக்கு சிறந்த கல்வியை புகட்டி அவனும் எதிர்காலத்தில் தனது சொந்த சம்பாத்தியத்தில் நின்று வாழ்வில் முன்னுக்கு வர உதவுபவர்கள் ஆசிரியர்கள் . அவர்கள் புகட்டிய கல்வியே அவனை எல்லோர் முன்பும் சிறந்து விளங்கி அவன் தலைநிமிர்ந்து நிற்க  காரணம் .
http://www.conncoll.edu/news/enews/images/India.jpg
ஆசிரியர்களும் மாணவர்களை தமது பிள்ளைகள் போல் அன்பாக , மாணவர்களுக்கு விளங்கும் படி பாடங்களை கற்பித்து மாணவர்கள் நல்ல பெறுபேறு பெற வேண்டும் என அயராது பாடுபடுகிறார்கள் . மாணவன் சிறந்த பெறுபேறு எடுக்கும் போது படிப்பித்த ஆசிரியர்களுக்கு பெருமை , அவன் படித்த பாடசாலைக்கு பெருமை , அவன் இருக்கும் ஊருக்கு பெருமை . இப்படி பல பெருமைகளை அவன் தேடி கொள்கிறான் .

ஆசிரியர்களும் தமது பணியை திறம்பட செய்து மாணவர்களுக்கு கல்வியை புகட்டுகிறார்கள் . அவர்களும் இன்னும் இன்னும் படித்து தமது அறிவை பெருக்கி கொண்டு இருக்கிறார்கள் . உலக ஆசிரியர் தினமான இன்று எல்லா ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர்களிடம் ஆசி பெற்று அவர்கள் நமது குரு. அவர்களை இன்று கௌரவப்படுத்தி மாலைகள் அணிவித்து இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும் .அவர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும் . அவர்கள் எம்மை சிறந்த அறிவுள்ள பிள்ளையாக மாற்றுகிறார்கள் .

ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

8 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

மிக்க நன்றி ஞாபகமூட்டியமைக்கு இந்த தருணத்தில் நானும் எனது ஆசிரியர்களுக்கு பிராத்திக்கிறேன்
தங்களின் ஆக்த்திற்கும் தங்களுக்கும் பாராட்டுகள்

r.v.saravanan said...

இடுகைக்கு நன்றி

santhanakrishnan said...

ஆசிரியர்களை நினைவு கூறும்
ஒரு நல்ல பதிவு.
தொடருங்கள்.

Anonymous said...

nalla pathivu.........



mano

Pavi said...

நன்றி ஹாசிம்
உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்
முதலாவதாக கருத்தும் தெரிவித்து உள்ளீர்கள் .

Pavi said...

நன்றி சரவணன்

Pavi said...

நன்றி கிருஷ்ணன்

Pavi said...

நன்றி மனோ