மழையை காணவில்லை
காணவில்லை என்றிருந்தோம்
அன்று வந்ததே மழை
அடடா என்ன மழையப்பா
அடை மழையோ மழை
காற்றும் மழையும் ஒன்றாக
வந்தால் சொல்லவா வேண்டும்
மரங்கள் முறிந்து விழுகின்றன
மழையோ கொட்டோ கொட்டென்று
கொட்டி வீதிகள் வீடுகள் கால்வாய்கள்
எல்லாம் தண்ணீர் குபு குபு
என்று பாய்கின்றது
இது இயற்கையின் சீற்றமா
சீற்றத்தின் சீற்றமா
ஒரு நாள் பூராக
தொடர்ந்த மழை அல்லவா ?
வீதிகள் எல்லாம் வெள்ளம்
மூன்று அடி, நான்கு அடிக்கு
பாய்கிறது ஆறு போல்
நான் பாடல் வரிகளில் கேட்டு
இருக்கிறேன் அடைமழை என்று
அன்றுதான் அதற்கான சந்தர்ப்பம்
எனக்கும் கிடைத்தது
அடடா மழைடா
அடை மழைடா .........
6 comments:
நல்ல வரிகள் , நல்ல போடோஸ்
அடடா மழைடா அடை மழைடா
malai peiyum pothu photos eduththu vaichcheenkalaa pavi......
mano
நன்றி அமைச்சரே
நன்றி சரவணன்
இல்லை மனோ
நன்றி உங்கள் வருகைக்கு
Post a Comment