எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஐஸ்கிரீம் . பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி , சுவைத்து சாப்பிடுவார்கள் இந்த ஐஸ்கிரீமை .
விழாக்கள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் சாப்பாட்டுக்கு அப்புறம் ஐஸ் கிரீம் பரிமாறுவார்கள் . விழாக்களுக்கு செல்லும் எல்லோரும் சாப்பிடவுடன் தவறாது ஐஸ் கிரீமையும் குடித்து தான் வருவார்கள் . ஐஸ் கிரீம் வகைகள் நாளுக்கு நாள் பல விதங்களிலும் , வண்ணங்களிலும் , சுவைகளிலும் வந்து எல்லோரினதும் வரவேற்பை பெறுகின்றன .
வனிலா , கொக்கோ , மாங்கோ , விளாம்பழம் , தேன்பாணி , பழங்கள் எல்லாம் சேர்ந்த பழக்கலவை என்று பல சுவைகளிலும் கடைகளில் கிடைக்கிறது . கோவில் திருவிழா காலங்களில் பார்க்க வேண்டும் கடைகளில் சன கூட்டத்தை . ஐஸ் கிரீம் கடைகளுக்குள் செல்ல முடியாது . சன நெரிசல் அதிகமாக இருக்கும் என்றால் பாருங்கள் . ஸ்பெசல் , கோண், மெஹா ஸ்பெசல் என்று ஒவ்வொரு விதத்தில் உண்டு . நாம் வீடுகளில் ஐஸ் கிரீம் பார் , பெட்டிகளில் அடைத்து விற்கும் ஐஸ் கிரீம்களை அதிகம் குடித்து பழக்கப்பட்ட நமக்கு திருவிழா காலங்களில் கடைகளில் உடனுக்குடன் வாங்கி குடிக்கும் ஐஸ் கிரீம் மிகவும் ருசியாக இருக்கும் .
நட்ஸ் போட்டது , கஜு போட்டது , ஜெலி போட்டது , கச்சான் பருப்பு போட்டது என்று பல ஐடம்கள் இருக்கின்றன .
எனக்கு ஐஸ் கிரீம் என்றால் ரொம்ப பிடிக்கும் . உங்களுக்கு எல்லோருக்கும் ஐஸ் கிரீம் பிடிக்குமா ???
3 comments:
pavi vaanka ice cream saapiduvam
sri
நன்றி ஸ்ரீ
படிக்கவும் ருசியாகத்தான் இருக்கிறது. ஐஸ்கிரிம் சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடும் அபாயமும் இருக்கிறதே!
Post a Comment