நாம் பல தவறுகள் செய்கிறோம் . ஏன் செய்கிறோம் என்று தட்டி கேட்ககூட நமக்கு ஆட்கள் இல்லை . சிலர் திருந்த சொல்லி நல்ல புத்திமதிகள் கூறினாலும் இப்போதைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை . அட்வைஸ் சொல்ல வந்திட்டாரு . அவரும் , அவற்றை அட்வைசும் என்று கூறுவோரும் உண்டு நம்மிடையே . என்ன செய்வது இதெல்லாம் கலிகாலம் என்று கூறி விட்டு செல்கிறார்கள் பெரியோர்கள் .
சரி நல்ல விடயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் மற்றவர்களுடன் . அது எமக்கும் நல்லது மற்றையோருக்கும் நல்லது என்ற நம்பிக்கையில் : ............
* ஒருவர் பேசும் போது நாம் குறுக்கே பேசக்கூடாது .
* அதிகமாக கோபப்பட கூடாது .
* பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் .
* பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் .
* வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்க வேண்டும்
* ஏதாவது ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி கூற வேண்டும் .
மற்றவர்களுடன் அன்பாக பேசி மகிழ வேண்டும் .
* சுத்தமான உடைகளை உடுக்க வேண்டும்
*நீங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்
*சக மாணவர்களின் திறமையை மனதார பாராட்ட வேண்டும்.
*பெற்றோர் , ஆசிரியர் , பெரியோர் சொற்கேட்டு நடக்க வேண்டும் .
2 comments:
அட்வைஸ் எல்லாம் நல்லாயிருக்கு. நாம பின்பற்றுவோமான்னுதான் சந்தேகம் சகோதரி.
அதென்றால் உண்மைதான் .
நன்றி குமார் .
ஹி...............ஹி. ...............
Post a Comment