இப்போது யாரை பார்த்தாலும் , அல்லது யார் வீட்டில் போய் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் , கமராவும் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறி விட்டது . சாதாரண நபர்கள் கூடி வாங்கி பாவிக்க கூடிய மாதிரி ஒவ்வொரு விலை, தரத்துக்கு ஏற்ப கமராக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன .
சில பேருக்கு கைத்தொலைபேசியிலே மிகவும் தெளிவான , அழகான படங்களை எடுக்க கூடியதாக கமரா பொருத்தப்பட்டு உள்ளன . அவர்கள் எந்த நேரத்திலும் , தேவையான நேரங்களில் படங்கள் எடுக்கலாம் . சிலர் கைத்தொலைபேசிகளில் கமரா இருந்தாலும் அவர்கள் வேறு கமரா வைத்து இருப்பார்கள் . எப்போதும் அவர்களில்ன் கான்ட் பாய்க்குக்குள் இருக்கும் .
சிலர் எங்கும் சுற்றுலா, திருவிழா , கல்யாண வீடு என்று போனால் கமராவை எடுத்து செல்வார்கள் . தேவையான அளவுக்கு படங்களை தட்டுவார்கள் . பின்பு தமது கணனியில் அவற்றை ஏற்றி பார்த்துவிட்டு நல்ல அழகான படங்களை வைத்துவிட்டு தேவையற்ற படங்களை அளித்து விடுவார்கள் . இப்போது டிஜிட்டல் கமரா இருக்க பயமேன் . படங்களை நொடிக்கு ஐந்து தடவைக்கு தட்டலாம் . பிரச்சனையே இல்லை . முன்னைய காலத்தில் என்றால் பில்ம்ரோல் முடிந்து விடும் என்று படம் எடுக்க கஷ்டப்படுவோம் .
இப்போது எல்லாம் படத்தை எப்படி எடுப்பது , சூம் பண்ணி எடுப்பது , அழகாக பின் காட்சி அமைப்பு இருக்கிறதா என்று திரையில் பார்த்து எடுக்கலாம் . ஒரு பிரச்சனையும் இல்லை . அதேவேளை நாம் கமரா வாங்கும் போது சில விடயங்களை கவனிக்க வேண்டும் . கமரா வாங்குவது ஒரு கலை. கமரா வாங்கும் முன் பல விஷயங்களில் நீங்கள் தெளிவு கொள்ளவேண்டும். முக்கியமாக புகைப்படம் எடுப்பது உங்களுக்கு கலையா, வேலையா, பொழுதுபோக்கா, வீட்டு உபயோகத்துக்கா என்பதில் தெளிவு வேண்டும்.
சாதாரண தேவைக்கு எனில் 'ஆட்டோமேடிக்' கமராவே போதும். கையில் பிடித்து எடுப்பதற்கு வசதியாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக வைத்து வாங்குங்கள். அத்தகைய கமராக்கள்தான் குடும்பத்திலுள்ள அனைவரும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.
எங்கேயும் விலை குறைத்தோ, இலவசமாக ஒரு பொருளுடனோ தருகிறார்கள் என்றால் அங்கெ போய் உடனே வாங்காதீர்கள் . உத்தரவாதம் உடைய , அங்கீகாரம் உடைய பெரிய கடைகளில் போய் கமராவை வாங்குங்கள் . அதுதான் தரத்தில் சிறந்தவை . பளுதாகினாலும் போய் திருத்தி வாங்கலாம் . பற்றி , அதனுடன் வரும் வயர்கள் என்பவை சரியாக உள்ளனவா என்று பார்த்து வாங்குங்கள் .
NIKCON, CANNON, PANASONIC, FUJI, SONY, போன்ற பெயர்களில் கமராக்கள் உள்ளன . எமக்கு எந்த பிராண்ட் பிடிக்குமோ அதனை நாம் வாங்கலாம் .
1 comment:
mmmmm unmaithaan pavi.
mano
Post a Comment