தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இப்போது கார்த்திக்கு . நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பையும் பெற்று உள்ளது . வெற்றிகளையும் ருசித்துள்ளது . இயக்குனர்களின் கையை கடிக்காமலும் உள்ளது என்று எல்லோரும் கார்த்தியை தேடி படை எடுக்கிறார்கள் . அதனை விட சிறுத்தையின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்த படம் என்ன , என்ன என்று அவரின் ரசிகர்கள் எல்லோரும் காத்து உள்ளனர் .
பல இயக்குனர்களும் கார்த்திக்கு கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் . இப்போதுதான் கார்த்திக்கு பிடித்த மாதிரி ஒரு கதையை சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் ஒருவர் . பல கதைகளை கேட்ட கார்த்தி இறுதியாக தேர்ந்தெடுத்திருப்பது புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை. இவர் வேறு யாரும் இல்லை . அவர் தான் சங்கர் தயாள் . இவர் இயக்குநர்கள் எழில், எஸ்.டி.சபாபதி ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
பல குழப்பங்களுக்கு மத்தியில் அடுத்த படத்துக்கு சரியான கதையை தெரிவு செய்து அந்த படத்துக்கு 'சகுனி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . இப்போது படங்களுக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பதற்கே ஒரு மாதம் வேண்டும் போல் இருக்கு . அப்படி தேடி பிடிக்க வேண்டு இருக்கிறது படத்தின் பெயரை .
இப்படத்திற்கு இசை ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: பி.ஜி.முத்தையா, கலை: ராஜீவன், படத்தொகுப்பு: ஆண்டனி. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது .
பல ரசிகர்களின் விரும்பும் ஹீரோ ஆக மாறி உள்ள கார்த்திக்கு சகுனி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . பார்ப்போம் இந்த படத்திலும் பட்டையை கிளப்புகிறாரா என்று . சிறுத்தை படத்தில் நடனத்திலும் , அங்க அசைவுகளிலும் , நடிப்பிலும் அசத்தி இருந்தார் கார்த்தி என்பது அனைவரும் அறிந்ததே .
2 comments:
present pavi
நன்றி சரவணன்
Post a Comment