Sunday, April 17, 2011

அஞ்சா சிங்கங்கள் ஜப்பானியர்கள்

http://commons.bcit.ca/civil/students/earthquakes/kobe_6.gif

தலைக்கு மேல் இடி விழுந்தால் 
என்ன , வெடித்தால் என்ன 
நாம் அஞ்சா சிங்கங்கள் 
என்று நெஞ்சை நிமிர்த்தி 
நிற்கும் குணம் கொண்டவர்கள் 
ஜப்பான் மக்கள் 

எல்லா இடங்களிலும் 
நாடுகளிலும் இப்போது 
எல்லாம் அழிவுகள் நடந்து 
கொண்டுதான் இருக்கின்றன 
எனினும் அதில் மீண்டு பழைய 
நிலைமையை எட்டி பிடிப்பவை 
சில நாடுகள் தான் 
http://disastermankind.com/wp-content/uploads/2011/03/1301004917-26.jpg
அணுகுண்டு போட்டு அளித்தார்கள் 
மீண்டு வந்தார்கள் 
தமது அயராத உழைப்பால் 
உலகையே தமது நாட்டை 
நிமிர்ந்து பார்க்க செய்தார்கள் 
ஓய்வின்றி உழைத்து 
ஏணிப்படிகளில் முன்னேறுகிறார்கள் 

அழுவதில்லை , புலம்புவதில்லை 
கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவதில்லை 
மற்றைய நாடுகளிடம் கையேந்தி 
நிற்பதில்லை , மற்றவர்களின் உதவிகளை 
நாடுவதில்லை -தமது 
கைகளே தமக்கு உதவி என்ற 
எண்ணம் கொண்ட தன்மானம் உள்ளோர் 
வாழும் நெஞ்சம் கொண்டவர்கள் 
ஜப்பானியர்கள் .
http://www.abc.net.au/reslib/200707/r160426_586651.jpg
சுனாமி வந்தது , பல உயிர்களை
 காவு கொண்டது , சொத்துகள் பல 
சேதம் ஏற்பட்டது , அணுஉலைகள் 
வெடித்தது இவை எல்லாவற்றுக்கும் 
கலங்கவில்லை ஜப்பானியர்கள் 
அவற்றை எப்படி சமாளித்து 
அடுத்தகட்டத்துக்கு நகர்வது எப்படி 
என்று உடனே சிந்திக்கிறார்கள் 

மனதை தென்புடன் வைத்திருக்கிறார்கள் 
துவண்டு விடவில்லை , விதியை 
நினைத்து வீழ்ந்து விடவில்லை 
இந்த ஜப்பானியர்கள் 
எப்படி அவற்றை வெல்ல முடியும் 
என்று சிந்திக்கிறார்கள் 
http://www.blogofasia.com/wp-content/uploads/japan-tsunami-2011-51.jpg
கனத்த இதயம் கொண்டோர் 
இந்த ஜப்பானியர்கள் 
இதே நமது நாடுகளில் அழிவுகள் 
ஏற்பட்டால் என்ன நடக்கிறது 
பல உலக நாடுகளின் உதவிகளை 
எதிர்பார்க்கின்றோம் , புலம்புகின்றோம் 
கண்ணீர் வடிக்கின்றோம் 
காலத்தை கண்ணீர் சிந்தியே கழிக்கின்றோம் 

ஜப்பானியர்கள் அஞ்சா நெஞ்சம் 
கொண்டவர்கள் என்று சொல்வது 
மிகவும் பொருத்தமானதே .

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அழிவில் தோல்வியில்
துவண்டுவிடாது
மீண்டு எழும் அவர்கள்
உண்மையில்
நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டிகள்
நம்பிக்கை யூட்டுமநல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு...

Pavi said...

நன்றி ரமணி உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்

Pavi said...

நன்றி பிரகாஷ்