தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பை சந்தோசமாக கொண்டாடுவது வழமை . இந்த ஆண்டும் சந்தோசமாக கொண்டாட இருக்கின்றனர் . எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் , துன்பங்களில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் பிரார்த்தனை .
பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் 14.04.2011 வியாழக்கிழமை “கர” என்னும் பெயருடன் தமிழ் புதுவருடம் பிறக்கின்றது.
தமிழர்களின் துயர் , இன்னல்கள் நீக்கி இந்த ஆண்டு ஒரு இனிய ஆண்டாக மலர வேண்டும் .
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கர வருஷம் 2011-04-14 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு பிறக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மேட சங்கிரமான புண்ணிய காலமாகும்.
மருத்துநீர் என்பது தாழம்பூ, தாது மாதுளம்பூ, தாமரைப்பூ, துளசி, வில்வம், அறுகு, பால், கோமயம், கோசலம், கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவற்றை சுத்தமான நீரில் இட்டுக்காச்சிய கஷாயமாகும். பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.
புதிய புத்தாடை அணிந்து எல்லோரும் மருத்துநீர் வைத்து நீராடி கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு , பெரியோர்களிடம் ஆசி பெற்று புதிய ஆண்டை சந்தோசத்துடன் ஆரம்பிக்க வேண்டும் . பெரியோர்களிடம் கைவிசேடம் பெற வேண்டும் . உற்றார் , உறவினர் வீடுகளுக்கு சென்று சந்தோசமாக எல்லோரும் புது வருடத்தை கொண்டாடுங்கள் .
5 comments:
அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
என் உயிரே
CLICK TO READ
====>
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? <===
.....
நன்றி சித்தாரா
நன்றி முருகானந்தன் டாக்டர் அவர்களே
உங்களுக்கும் உரித்தாகட்டும்
Post a Comment