Saturday, April 30, 2011

தொழிலாளர்கள் எல்லோருக்கும் உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்

http://1.bp.blogspot.com/-5Ql-ByFj-pE/TamkkPDF6jI/AAAAAAAAArQ/CienGNC0fyQ/s1600/May+Day+2007.jpg

கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கிறார்கள் . அல்லும், பகலும் தமது சக்தியை வீணாக்கி உழைத்து சம்பாதிக்கின்றான் மனிதன் .சிலர் தகுதிக்கு ஏற்ற வேலையை செய்கிறார்கள் . சிலர் படிப்புக்கு ஏற்ற வேலை செய்கிறார்கள் . சிலர் நல்ல பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் திரிகிறார்கள் . சிலர் படித்த படிப்பு வேற செய்யும் வேலை வேராக இருக்கிறது .

இன்ட உலகில் வேலை இல்ல பிரச்சனை நீண்டு கொண்டு செல்கிறது . படித்த இளைஞர் , யுவதிகளுக்கு வேலை இல்லை . இதனால் பாரிய பிரச்சனைகள் தலை தூக்குகின்றன . பெரும்பாலும் பலர் விவசாயத் தொழிலை கைவிட்டு கோட் போட்டு , பட்டி அணிந்து மிகவும் மதிப்பு மிக்க தொழிலை தான் நாடுகின்றனர் . அதுவும் ஒரு பிரச்சனையாக தலை தூக்கி உள்ளது .
http://i1.trekearth.com/photos/16372/hard_labour.jpg
செய்யும் வேலைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் முதலாளிமார் . அவர்களுக்கும் குடும்பம் இருக்கும் , அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் முதலாளிமார் . சில முதலாளிமார் தான் நன்மை அடைந்தால் தனது கம்பனி , நிறுவனம் நல்ல லாபம் அடைய வேண்டும் , தான் முன்னேற வேண்டும் என நினைக்கின்றனர் . கஷ்டப்பட்டு நாள்தோறும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை அவர்களுக்கும் கொடுக்க மறுக்கிறார்கள் . இது தவறு .
http://www.stolenchildhood.net/images/child_labour_sri_lanka.jpg
நாளை மே தினம் . ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . உழை, உழைக்க விடு , முன்னேறு . சோம்பலாய் இராதே . கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறு . இதைத்தான் நான் சொல்லவருகிறேன் . தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தாமல் அவர்களை ஒரு நண்பனாக , சகோதரனாக ஏற்று வேலை செய்ய வேண்டும் . அது ஒரு சிறந்த பண்பு , சிறந்த குணம் . 

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்பதே நான் தொழிலாளர் தினத்தில் சொல்லும் செய்தி .................

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மே தின வாழ்த்துக்கள்..

Pavi said...

நன்றி சௌந்தர் .
எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும்