லிபிய நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து வந்த கடாபியின் சரித்திரம் முடிந்து விட்டது . கடந்த
நான்கு தசாப்தங்களாக கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது . நீண்டகால ஆட்சி முடிவுக்கு வந்து இருக்கிறது . லிபிய மக்களுக்கு இப்போது தான் சுதந்திரம் கிடைத்து இருக்கிறது .
தனது நாட்டு மக்களாலே எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் . லிபியாவின் ஒவ்வொரு அணுவும் கடாபியின் சொற்படியே இயங்கின . மக்களுக்கு என்று ஒரு நன்மையையும் அவர் செய்யவில்லை . இதுதான் சர்வாதிகாரம் .
கடாபி 1942ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்தார். இளம் வயதிலேயே லிபிய இராணுவத்தில் வீரராக இருந்த இவர் 1965ஆம் ஆண்டு பெங்காசி இராணுவ பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சிக்குச் சென்றார். தனக்கென ஆதரவாளர்களை திரட்டி தனி இராச்சியம் ஒன்றை ஏற்படுத்தினார் .
இராணுவப்புரட்சி மூலம் தனது 29 ஆவது வயதில் ஆட்சியைக் கைப்பற்றினார் . 1969ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆட்சியைக் கைப்பற்றி லிபிய அரபுக் குடியரசு என்று அறிவித்தார். 41 வருடங்களாக தொடர்ந்து ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்து ஆட்சி செய்துள்ளார்.
மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர், தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார். ஏழைகளுக்கு அடிப்படை வாழ்க்கை வசதிகளை அளிப்பதாகக் கூறிய அவரது குடும்பம் கடந்த 41 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாகக்கூட குற்றச்சாட்டு எழுந்தது.
தன் உயிர் உள்ள வரை தனது உயிர் நாடியாக லிபியா இருக்க வேண்டும் என்பதே கடாபியின் கனவாக இருந்தது. ஆனால், இது முழுமையான அளவு நிறைவு பெறாமல் முற்றுப்புள்ளியை நோக்கிச் செல்லும் என்று கடாபி கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்.
இறக்கும்போது கடாபிக்கு வயது 69. லிபிய நாட்டை தனது சர்வாதிகாரத்தில் வைத்திருந்த கடாபி ஒரு கணத்தில் நாய் சுட்டது போல் அவரை சுட்டு போட்டு விட்டார்கள் . பெரிய பெரிய சர்வாதிகாரிகளின் நிலைமையே இப்படித்தான் . எல்லாம் இந்த உயிர் இருக்கும் வரைக்கும் தான் இந்த ஆட்டம் . பெரும் சர்வாதிகாரிகளின் நிலமை கடைசியில் இதுதான் என்பது எமக்கு எல்லாம் தெட்ட தெளிவாக தெரிகிறது .
பல சொத்துகளை தேடி என்ன பயன் . மக்களின் மனதில் இடம் பிடித்தால் போதும் . மக்களே தன் சொத்து என நினைத்து இருந்தால் இப்படி நடந்திருக்குமா ???
13 comments:
கடாபி கொல்லப்பட்டாலும் கூட,அரபுலகில் இன்றுவரை ஒழிக்கப்பட்ட ஏனைய அரபு நாடுகளின் நிலையே லிபியாவிலும் தொடரும்!மேற்குலகம் அரபு மக்களை நிம்மதியாக வாழ அனுமதிக்காது.
பெரியண்ணன் நினைத்தது நடந்து உள்ளது, இனி பெரியண்ணனை எதிர்ப்பவர்களுக்கு இது தான் கதி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்...
பல சொத்துகளை தேடி என்ன பயன் . மக்களின் மனதில் இடம் பிடித்தால் போதும் . மக்களே தன் சொத்து என நினைத்து இருந்தால் இப்படி நடந்திருக்குமா ???
yes
மன்னராட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியவர் தொடர்ந்து அதிபராக தானே நீடித்தார்.
பெரிய சர்வாதிகாரிகளின் நிலைமையே இப்படித்தான் .
எல்லாம் இந்த உயிர் இருக்கும் வரைக்கும் தான் இந்த ஆட்டம்.
சரியாகவே சொன்னீர்கள்.
மனிதனாய் வாழாமல் மிருகமாய் வாழ்ந்தவன் நிலை இப்படித்தான் .
பல சொத்துகளை தேடி என்ன பயன் . மக்களின் மனதில் இடம் பிடித்தால் போதும் . மக்களே தன் சொத்து என நினைத்து இருந்தால் இப்படி நடந்திருக்குமா ???
பொறுத்திருந்து பார்ப்போம் .
நன்றி யோகா
நன்றி ஜீவா
நன்றி சரவணன்
நன்றி வருண்
உண்மைதான் நண்பா
நன்றி அருள் உங்கள் வருகைக்கு
பெரியண்ணன் நினைத்தது நடந்து உள்ளது ha ha haaaaa !!!!
Post a Comment