எல்லா பெண்களும் அழகாக இருக்க ஆசைப்படுகிறார்கள் . அதில் அதிகம் அழகுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் . அதை பூசவா ,இதை பூசவா , என்ன செய்தால் நான் அழகாக இருப்பேன் என்று ஒரே யோசனை . ஏனையவர்களையும் கேட்பது. நான் அழகாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று . இப்படி போகிறது .
முதலில் உணவில் கவனம் செலுத்துங்கள் . சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள் . தேக ஆரோக்கியம் முக்கியம் . நொறுக்குத்தீனிகளை குறைத்து சத்துள்ள மீன் வகைகள் , காய்கறிகளை உண்ணுங்கள் . போதிய அளவு நீர் அருந்துங்கள் . நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள் . தண்ணீர் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடியுங்கள் . உங்கள் உடம்புக்கு நல்லது .
கொழுப்பு சத்துள்ள உணவுகளை குறையுங்கள் . நீர் ஆகாரம் உள்ள உணவுகளை உண்ணுங்கள் . போதிய அளவு உடட்பயிட்சி செய்யுங்கள் . காலை எழுந்தவுடன் நடத்தல் , ஓடுதல் போன்ற சிறிய பயிட்சிகளை செய்யுங்கள் .
3 comments:
அழகு டிப்ஸ்கள் அருமை பவி
நன்றி கமல்
நல்ல டிப்ஸ்
Post a Comment