Wednesday, October 12, 2011

அழகுக்கு சில டிப்ஸ்

 http://www.newbiemommy.com/images/milk.jpg
எல்லா பெண்களும் அழகாக இருக்க ஆசைப்படுகிறார்கள் . அதில் அதிகம் அழகுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் . அதை பூசவா ,இதை பூசவா , என்ன செய்தால் நான் அழகாக இருப்பேன் என்று ஒரே யோசனை . ஏனையவர்களையும் கேட்பது. நான் அழகாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று . இப்படி போகிறது .
 http://www.agricorner.com/wp-content/uploads/2010/11/vegetables-fresh.jpg
முதலில் உணவில் கவனம் செலுத்துங்கள் .  சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள் . தேக ஆரோக்கியம் முக்கியம் . நொறுக்குத்தீனிகளை குறைத்து சத்துள்ள மீன் வகைகள் , காய்கறிகளை உண்ணுங்கள் . போதிய அளவு நீர் அருந்துங்கள் . நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள் . தண்ணீர் எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு குடியுங்கள் . உங்கள் உடம்புக்கு நல்லது . 
கொழுப்பு சத்துள்ள உணவுகளை குறையுங்கள் . நீர் ஆகாரம் உள்ள உணவுகளை உண்ணுங்கள் . போதிய அளவு உடட்பயிட்சி செய்யுங்கள் . காலை எழுந்தவுடன் நடத்தல் , ஓடுதல் போன்ற சிறிய பயிட்சிகளை செய்யுங்கள் . 
http://www.jdmoka.com/dolphinstate/food_ricenfish.jpg
விட்டமின்  டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம். 
நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது
விட்டமின் ஏ சத்து நிறைந்த கரட்டை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்.

3 comments:

Jaleela Kamal said...

அழகு டிப்ஸ்கள் அருமை பவி

Pavi said...

நன்றி கமல்

'பரிவை' சே.குமார் said...

நல்ல டிப்ஸ்