தனது ஒவ்வொரு படங்களிலும் தனது அதீத திறமையை காட்டி சிறந்த படங்களை தந்து கொண்டு இருக்கிறார் சூர்யா . கஜினி படத்தில் வித்தியாசமான சூர்யாவை பார்க்க முடியும் . நந்தாவில் ஒரு விதம் . அதே சிங்கத்தில் முறுக்கிய மீசையுடன் கம்பீரமான தோற்றம் .
தனது கடின உழைப்பு , சிறந்த நடிப்பு என எல்லா நடிகர்களுக்கும் சவால் விடும் அளவுக்கு சூர்யா முன்னேறி உள்ளார் . இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் என்றால் அது சூர்யா தான் . நாளுக்கு நாள் அதிக ரசிக, ரசிகைகளை அதிகரித்துக் கொண்டு அபாரமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார் . இனி அஜித் , விஜய் எல்லாம் பின்னுக்குத்தான் என்ற அளவில் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறார் .
ஒரு காலத்தில் இதென்ன இவரின் நடிப்பு என சலிப்பை ஏற்படுத்தி பாலா , கெளதம்மேனன் போன்றோரால் பட்டை தீட்டப்பட்டு இப்போது இவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் அளவுக்கு மிளிர்கின்றார் என்றால் அதுக்கு காரணம் சூர்யாவின் கடின உழைப்புத்தான் .
தனது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாகவும் , வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் . எல்லோரும் விரும்பி பார்க்கும் படமாகவும் , வித்தியாசமான கதை , கெட்டப் , இயக்குனர் என ஒவ்வொரு படத்திலும் அவரின் முன்னேற்றம் அதிகம் .
பேரழகன் , அயன் , கஜினி , சிங்கம் என வெற்றி நடை தொடர்கிறது . இப்போது ஏழாம் அறிவு வெற்றி நடை போடுகிறது . இன்னும் இவரின் வெற்றி நடை தொடர இருக்கிறது . போதிதர்மன் என்ற பெயரை இப்போது தான் நாம் அறிகிறோம். தமிழனுக்கு தமிழர்களை , அவர்களின் கலைகளை பற்றி தெரியாமல் இருக்கிறது . பாடல்கள் எல்லாமே சூப்பர்.
அடுத்து ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா . ஏழாம் அறிவு எல்லோரினது ஆறு அறிவையும் தட்டி எழுப்புகிறது . சூர்யாவின் நடிப்புக்கும் , கடின உழைப்புக்கும் , முருகதாசின் கதைக்கும் , உதயநிதியின் இயக்கத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி .
எனக்கு படம் பிடிச்சிருக்கு . நல்ல முயற்சி . சூர்யாவை எனக்கு பிடிக்கும் . இன்னும் பிடித்து இருக்கிறது .
4 comments:
உண்மையிலேயே சூர்யா கடின உழைப்பாளிதான்.
படம் பார்த்தேன் பவி சூர்யா கலக்கியிருக்கிறார் எனது தொடர்கதை படித்தீர்களா
ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி பாலா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் பார்த்தேன். படம் பிடித்து இருக்கிறது . வருகிறேன்
நன்றி சரவணன்
Post a Comment