Monday, November 7, 2011

ஏழாம் அறிவு சூர்யாவின் கடின உழைப்பு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5I42LGWALcKYCbBiAWWjEgP1MVRKHiPwGUNf2x4pHQUkdee5jkYjT6dEUV6Xpt35TVm8hgJeqNGjA_LY82IHKlhJj3eRrwLRULFiRcTRU9Gv3qVWb-G6-1gPnieBQuopWpxD5u73MJPqL/s1600/7aum+arivu+stills2.jpg
தீபாவளிக்கு வந்து திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ஏழாம் அறிவு திரைப்படம் . சிங்கத்த காட்டில பாத்து இருப்பீங்க , வேட்டையாடி காட்டில பாத்து இருப்பீங்க ஆனா, கடின உழைப்பு , வீரம் , ஆவேசம் இவற்றை பாக்கணும் என்னா ஏழாம் அறிவு போய் பாருங்க .

தனது ஒவ்வொரு படங்களிலும் தனது அதீத திறமையை காட்டி சிறந்த படங்களை தந்து கொண்டு இருக்கிறார் சூர்யா . கஜினி படத்தில் வித்தியாசமான சூர்யாவை பார்க்க முடியும் . நந்தாவில் ஒரு விதம் . அதே சிங்கத்தில் முறுக்கிய மீசையுடன் கம்பீரமான தோற்றம் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhquHj08mXSGGa9dQVhBH_6jQAxTJpcwZzWhfmGtJ9wv3RQCZvsOx_4Eb0Wb56Ahdi0ACL2XRd16RsLwZLVKs0_sYoDRiLl74qLs8mnaR4hAw8ZbLtoYnv3KUyFcMY37RN9zv4BjK-GsZk/s1600/7m+Arivu+Latest+Unseen+Stills+Photos+%252840%2529.jpg
தனது கடின உழைப்பு , சிறந்த நடிப்பு என எல்லா நடிகர்களுக்கும் சவால் விடும் அளவுக்கு சூர்யா முன்னேறி  உள்ளார் . இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் என்றால் அது சூர்யா தான் . நாளுக்கு நாள் அதிக ரசிக, ரசிகைகளை அதிகரித்துக் கொண்டு அபாரமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார் . இனி அஜித் , விஜய் எல்லாம் பின்னுக்குத்தான் என்ற அளவில் ஜெட் வேகத்தில் பறந்து கொண்டு இருக்கிறார் .

ஒரு காலத்தில் இதென்ன இவரின் நடிப்பு என சலிப்பை ஏற்படுத்தி பாலா , கெளதம்மேனன் போன்றோரால் பட்டை தீட்டப்பட்டு இப்போது இவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் அளவுக்கு மிளிர்கின்றார் என்றால் அதுக்கு காரணம் சூர்யாவின் கடின உழைப்புத்தான் . 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCY8UafRrL6d0mG9Qr8LoB9X1ETY-DISln2ilYC-O6BwSh8-mx9aDbdU1fJLFTyRZOJvut8xdhwPgOpksBjy3OYGU9uYNL5_kck1sZ_jjvrHPnR4e6GgP2bfuZcSHZTadt7l3zwhZh5s2_/s1600/7am+Arivu+New+Look+Photos+%25281%2529.jpg
தனது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாகவும் , வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் . எல்லோரும் விரும்பி பார்க்கும் படமாகவும் , வித்தியாசமான கதை , கெட்டப் , இயக்குனர் என ஒவ்வொரு படத்திலும் அவரின் முன்னேற்றம் அதிகம் . 

பேரழகன் , அயன் , கஜினி , சிங்கம் என வெற்றி நடை தொடர்கிறது . இப்போது ஏழாம் அறிவு வெற்றி நடை போடுகிறது . இன்னும் இவரின் வெற்றி நடை தொடர இருக்கிறது . போதிதர்மன் என்ற பெயரை இப்போது தான் நாம் அறிகிறோம். தமிழனுக்கு தமிழர்களை , அவர்களின் கலைகளை பற்றி தெரியாமல் இருக்கிறது . பாடல்கள் எல்லாமே சூப்பர். 
http://www.boxoffice9.com/gallery/var/thumbs/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/7aam-Arivu-Stills,Photos,Pics/shruti%20hassan%20in%207am%20arivu%20stills.jpg?m=1315984287
அடுத்து ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா . ஏழாம் அறிவு எல்லோரினது ஆறு அறிவையும் தட்டி எழுப்புகிறது . சூர்யாவின் நடிப்புக்கும் , கடின உழைப்புக்கும் , முருகதாசின் கதைக்கும் , உதயநிதியின் இயக்கத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி .
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNiqQMuigle2Pjs-hiBQiZLkBxn-5nmIZ5Q9ro5HH724ctIaXIcp_Sn8lb-xzrFkEYq_PmVj39aE3fyb-SmggGo7dL2POEtgT1TTb0OJQEOMR0-NuzmYZ_MRGdo57epXN0zVycdTr1qls/s1600/surya_7am_arivu-stills-1.jpg
எனக்கு படம் பிடிச்சிருக்கு . நல்ல முயற்சி . சூர்யாவை எனக்கு பிடிக்கும் . இன்னும் பிடித்து இருக்கிறது . 


4 comments:

பாலா said...

உண்மையிலேயே சூர்யா கடின உழைப்பாளிதான்.

r.v.saravanan said...

படம் பார்த்தேன் பவி சூர்யா கலக்கியிருக்கிறார் எனது தொடர்கதை படித்தீர்களா

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நன்றி பாலா

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் பார்த்தேன். படம் பிடித்து இருக்கிறது . வருகிறேன்
நன்றி சரவணன்